காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் முறை

kamatchi amman vilakku
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை தீபங்கள் ஏற்றினாலும் கட்டாயமாக இந்த காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும். இந்த காமாட்சி அம்மனை பொறுத்த வரையில் குலத்தைக் காக்கும் தெய்வம் என்று கூறுவார்கள். எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் முதலில் இந்த விளக்கை ஏற்றி துவங்குவார்கள்.

காமாட்சி அம்மன் உலகத்திலுள்ள மக்களின் நலனுக்காக தவம் புரிந்தவர் என்ற சிறப்பு பெற்றவர். அத்தகைய தவம் புரியும் வேளையில் அனைத்து தெய்வங்களும் அவருடன் சேர்ந்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் தான் மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த காமாட்சி அம்மன் தீபத்திற்கு உண்டு

- Advertisement -

அத்தகைய சிறப்புமிக்க காமாட்சி அம்மன் விளக்கை தினந்தோறும் ஏற்றும் வழிமுறைகளோடு இந்த ஒரு விஷயத்தையும் கடைபிடிக்க வேண்டும். இதனால் நம்முடைய குடும்பம் என்றென்றைக்கும் தழைத்து செல்வ செழிப்போடு வாழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்தான தகவல்களை ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குலம் தழைக்க காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் முறை

இந்த காமாட்சி அம்மன் விளக்கு எப்பொழுதும் தரையில் வைத்து ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கை ஒரு சிறிய தட்டின் மீது வைத்து தான் ஏற்ற வேண்டும். அந்த தட்டானது இந்த விளக்கின் அளவை விட பெரியதாக இருக்க வேண்டும். அதே போல் விளக்கு தட்டில் சமமாக அமர வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கு எப்பொழுதும் பார்க்க பளிச்சென்று மஞ்சள் குங்குமத்தோடு வைத்திருக்க வேண்டும். விளக்கு பாழடைந்து இருக்கக் கூடாது. அதே போல விளக்கு திரி போட்டு ஏற்றும் இடத்தில் மஞ்சள் குங்குமம் வைக்க கூடாது. இந்த அம்மன் விளக்கில் வைக்கும் பொட்டானது ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். விளக்கிற்கு பின்புறமும் பொட்டு வைக்க வேண்டும். அதே போல விளக்கை வைத்து ஏற்றும் தட்டிலும் கட்டாயம் 5 போட்டு வைக்க வேண்டும்.

விளக்கை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போட வேண்டும். அதே போல் தினமும் இந்த விளக்கின் திரியை மாற்ற வேண்டும். பழைய திரியை போட்டு விளக்கு ஏற்ற கூடாது. விளக்கின் மீது பூ வைக்காமலும் ஏற்றக் கூடாது. எப்போதும் விளக்கின் மீது பூ கட்டாயமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த விளக்கை வைக்கும் தட்டில் சில பொருட்களை சேர்ப்பதால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் குங்குமம் போட வேண்டும். அத்துடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் இந்த தட்டில் வைக்க வேண்டும். நாணயத்தின் சிங்கமுகமானது மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த தட்டில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து தட்டை சுற்றிலும் பூக்களால் அலங்காரம் செய்த பிறகு தீபம் ஏற்ற வேண்டும். இந்த முறையில் தீபம் ஏற்றும் போது காமாட்சி அம்மன் மனம் குளிர்ந்து நம்முடைய குலத்தை காப்பார் என்றும் சொல்லப்படுகிறது. குலதெய்வமே தெரியாதவர்கள் கூட இந்த காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்து வழிபடலாம் அத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மன் தான் இவர்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் விஷ்ணு தீபம்

இந்த தட்டில் உள்ள மஞ்சள் குங்குமம் இவற்றை தினமும் மாற்ற முடிந்தால் மாற்றலாம் அல்லது வெள்ளி செவ்வாயில் புதிதாக தண்ணீரை மாற்றி விட்டு தீபம் ஏற்றுங்கள். இது உங்கள் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -