உங்களது குழந்தை திடீர் திடீர் என்று பயந்து அழுகிறதா? காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்

kulandhai

குழந்தைகள் என்றால் அழுவது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு, சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் திடீர் திடீரென்று எதையோ கண்டு பயந்தார் போல் அழ ஆரம்பித்துவிடும். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் தாய்க்கு கூட பதில் சொல்ல முடியாது. சில குழந்தைகள் இரவு சமயங்களில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் திடீரென்று விழித்து வீல் வீல் என்று கத்த ஆரம்பித்து விடும். இதற்கும் காரணம் என்னவென்று தெரியாது. இதன் மூலம் பல குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். வாந்தி ஏற்படும். மருத்துவரிடம் சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சில வகையான மருந்துகளை எழுதித் தந்து விடுவார்கள். உடல் உபாதையாக இருந்தால், அது மருந்தில் சரியாகிவிடும். ஆனால் கண்ணுக்கு தெரியாத தேவதைகள் அந்தக் குழந்தையின் உடலில் ஏறிக்கொண்டு, ஏதாவது பிரச்சினை செய்து வந்தால்! யாருக்கும் தெரியாது. பல பேர் இதை நம்ப மாட்டார்கள் தான்.

Tamil boy baby names

அந்த காலத்திலெல்லாம் இப்படி குழந்தைகள் அழுதால், தாயத்து போடும் வழக்கம் இருக்கும். இல்லையென்றால், மசூதிக்குச் சென்று மந்திரம் ஓதிக்கொண்டு தாயத்து போட்டுவிட்டு மந்திரித்த பின்பு குழந்தைகள் இப்படி அழுவதை நிறுத்திவிடும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் சிறிய குழந்தைகளுக்கு தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. குழந்தைகள் நன்றாக வளர்ந்த பின்பு 16 வருடம் தொடர்ந்து இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை பயந்த குழந்தைகளுக்கு தாயத்து அணிவித்தால் சரியாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறிய கூற்று என்றும் பொய்யாவது இல்லை.

சில இடங்களில் வழக்கமாக தாயத்து போடுபவர்கள் இருப்பார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று நாம் தவிர்த்து வருகின்றோம். பலருக்கு எங்கு சென்று தாயத்து அனுபவிப்பது என்று கூட தெரியாது அப்படி பட்டவர்களுக்கான ஒரு சுலபமான வழி தான் இது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சில வேர்களை வைத்து, நம் குழந்தைகளுக்கு அந்தந்த வயதில், அந்தந்த தாயத்துகளை நாமலே வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

thayathu

1 நாள் 1 மாதம் 1 ஆண்டு -நாயுருவி வேர்
2 நாள் 2 மாதம் 2 ஆண்டு -தூ துவளை வேர்
3 நாள் 3 மாதம் 3 ஆண்டு -முருங்கை வேர்
4 நாள் 4மாதம் 4 ஆண்டு -நந்தைச்சூரி வேர்
5 நாள் 5 மாதம் 5 ஆண்டு -ஓர் இதழ் தாமரை வேர்
6 நாள் 6 மாதம் 6 ஆண்டு-குப்பைமேனி வேர்
7 நாள் 7 மாதம் 7 ஆண்டு-வில்வமரவேர்
8 நாள் 8 மாதம் 8 ஆண்டு-ஊமத்தைவேர்
9 நாள் 9 மாதம் 9 ஆண்டு-மூ ங்கிரட்டை வேர்
10 நாள் 10 மாதம் 10ஆண்டு -நில ஆவாரை வேர்
11 நாள் 11 மாதம் 11 ஆண்டு-எருக்கன் வேர்
12 நாள் 12 மாதம் 12 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்
13 நாள் 13 மாதம் 13 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்
14 நாள் 14 மாதம் 14 ஆண்டு-குட்டிவிளாத்தலை வேர்
15 நாள் 15 மாதம் 15 ஆண்டு-திருநீற்றுப் பச்சை வேர்
16 நாள் 16 மாதம் 16 ஆண்டு -கஞ்சாங்கோரை வேர்

Baby-and-sivan

சில குழந்தைகள் தூங்கும் போது சிரிக்கும். வீட்டில் உள்ள பெரியோர்கள் தேவதைகள் சிரிப்பு காட்டுகிறார்கள் என்று சொல்லுவார்கள். சில சமயம் அழும். யாரோ ஒரு தேவதை மிரட்டிட்டு போய் இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க! இப்படியாக குழந்தைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் பயப்படாமல் பாதுகாக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அந்தந்த வயதிற்கு, அந்தந்த வேரை வாங்கி, ஒரு சிறிய தாயத்தினுள் போட்டு, அவர்களது கழுத்தில் கட்டி விட்டு விடுங்கள். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. நிச்சயமாக உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது உறுதி. மேலே கூறப்பட்டுள்ள நாள், மாதம், ஆண்டுகளில் வரும் எந்த பிரச்சனைக்கும் இந்த மூலிகை தாயித்து ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.

English Overview:
Here we have Baby crying reasons in Tamil. We can also call it as Kulandhai azha karanam.