குழந்தை பாக்கியம் கிடைக்க பாலாடை தீபம்

murugan
- Advertisement -

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அந்த செல்வங்களை அனுபவிப்பதற்கு குழந்தை செல்வம் என்ற ஒன்று வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைப்பது நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். குடும்பம் என்றால் குடும்பத்தில் இருக்கும் நபர்களை தான் குறிக்கும். அதிலும் குறிப்பாக நாம் பெற்ற பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டும் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்று தான் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அந்த குழந்தை செல்வமே இல்லாமல் கஷ்டப்படக் கூடிய தம்பதிகள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மகா பெரியவர் கூறிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பாலாடை தீபம்

பொதுவாக குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்றால் அதற்காக மருத்துவரை அணுகி மருந்துகள் சாப்பிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாக வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். இப்படி வழிபாடுகளை செய்பவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு செயலாக இருப்பது தான் முருகப்பெருமான் வழிபாடு.

- Advertisement -

அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் நாம் விரதம் இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பல ஆன்மீகவாதிகள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமான் வழிபாட்டோடு சேர்ந்து இந்த ஒரு தீபத்தை மட்டும் நாம் தினமும் நம்முடைய பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

அந்த தீபம் தான் பாலாடை தீபம். பொதுவாக குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்காக சங்கு என்று ஒன்று வாங்கி வைத்து இருப்பார்கள். அதை ஒரு சிலர் பாலாடை என்றும் கூறுவார்கள். அதை புதிதாக வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்திடம் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை கணவனும் மனைவியும் சேர்ந்தவாறு ஏற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது தங்களால் இயன்ற அளவு ஆரஞ்சு பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த பழங்களை சுவாமிக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு அதை எடுத்து அந்த ஆலயத்திற்கு வரும் குழந்தைகளுக்கு உங்களின் கைகளால் கொடுக்க வேண்டும். ஒரே ஒரு பழத்தை மட்டும் திரும்ப வீட்டிற்கு எடுத்து வந்து கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து உண்ண வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க வழிபாடு

முருகப்பெருமானின் பரிபூரண அருளையும் பெற்று விரைவிலேயே குழந்தை செல்வம் கிடைக்க இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -