குழந்தை பாக்கியம் பெற உதவும் எளிய பரிகார மந்திரம்

manthiram-

மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்நாள் முழுவதும் உறவுகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் நமக்கென்று இருப்பது கணவன்-மனைவி உறவு மட்டுமே.அந்த கணவன்-மனைவியின்.இல்லற வாழ்வை அர்த்தமுடையதாக்குவது குழந்தை செல்வம் தான்.ஆனால் ஒரு சிலருக்கோ இக்குழந்தைப் பேறு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது, சிலருக்கு கிட்டாமலே போகிறது. அந்தக் குறையை போக்குவதற்காண மந்திரம் தான் இது.

santhana lakshmi

மந்திரம்:
“ஓம் க்லீம் ஸெளம் ஹ்ரீம் ஸர்வ செளபாக்கியம்
தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவஸம் குரு குரு ஸ்வாஹா”.

பொது பொருள்:

ஆனந்த ரூபமாய் வீற்றிருக்கும் நாராயணனின் துணைவியே, எங்களுக்கு அணைத்து சௌபைக்யங்களோடு மழலை செல்வத்தை தந்தருள வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
மனதில் இருக்கும் துயரங்களை நீக்கும் மாரியம்மன் தாலாட்டு

இந்த மந்திரத்தை சந்தானலட்சுமியின் படத்திற்கு முன் நின்று, தினமும் 108 முறை வீதம் 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும். கற்கண்டு, வடை, பாயசம், தேன், தேங்காய், மலர், சந்தனம்,ஆகியவற்றை வைத்து தூபதீபம் காட்டி ஜெபம் செய்ய சித்தியாகும். மேலும் பெண்கள், அவர்களின் மாதாந்திர அவஸ்தை நீங்கி, நான்கு நாட்கள் கடந்த பின் ஆலயம் சென்று குரு பகவானை வணங்க வேண்டும். அதோடு கோவிலில் வடகிழக்கு பகுதியை பெருக்கி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்: