- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தை பாக்கியம் கிடைக்க தைச்செவ்வாய் வழிபாடு

குழந்தை பாக்கியம் கிடைக்க தைச்செவ்வாய் வழிபாடு

- Advertisement -

தை மாதம் என்பது அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதற்குரிய மாதமாகவே திகழ்கிறது. தை மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாட்டிற்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறலாம். அந்த வகையில் தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் விசேஷமான கிழமையாக திகழ்கிறது. பொதுவாக செவ்வாய்க்கிழமை என்பது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல்தான் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். இந்த தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று பத்திரகாளி அம்மனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தைச்செவ்வாய் வழிபாடு

ஒருவருடைய வம்சம் தலைதூங்க வேண்டும் என்றால் வாழையடி வாழையாக வளர வேண்டும் என்றால் கண்டிப்பாக முறையில் குழந்தை செல்வம் என்பது இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பலரும் குழந்தை செல்வம் கிடைக்காமல் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி அலைந்து கொண்டு இருக்கிறார்கள். யார் என்ன மருத்துவம் கூறினாலும் அதை உடனே செய்வார்கள். ஏதாவது ஒன்று செய்தாவது குழந்தை செல்வம் வேண்டும் என்பதுதான் அவர்களின் முழுமையான நோக்கமாக இருக்கும். எவ்வளவு மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தாலும் எவ்வளவு பரிகாரங்களை செய்திருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் செய்ய வேண்டிய தை மாத செவ்வாய்க்கிழமை வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தைமாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் செய்ய வேண்டும். கண்டிப்பாக முறையில் அருகில் இருக்கக்கூடிய பத்திரகாளி அம்மனின் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமோ அவர்கள் அன்றைய தினம் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இரண்டு வேளைகளிலும் எளிமையான உணவுகள் பால் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தினம் விரதம் இருந்து அருகில் இருக்கக்கூடிய பத்திரகாளி அம்மனின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது மூன்றே மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த எலுமிச்சம் பழங்கள் புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழங்களாக இருக்க வேண்டும்.

கோவிலுக்கு சென்று அம்மனுக்கு முன்பாக இருக்கக்கூடிய திரிசூலத்தில் உங்களுடைய உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இருக்க கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை திரிசூலத்தில் குத்தி விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய இரண்டு எலுமிச்சம் பழங்களை அம்மனின் பாதத்தில் வைக்கச் சொல்லி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்து உங்களால் இயன்ற அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் அம்மனை வலம் வந்து மடிபிச்சை கேட்பது போல் அம்மனிடம் கேட்டு அந்த இரண்டு எலுமிச்சம் கனிகளை திரும்பவும் வாங்கி வரவேண்டும்.

- Advertisement -

வாங்கி வந்த இந்த இரண்டு எலுமிச்சம் பழங்களை அன்றைய தினம் முழுவதும் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வெறும் வயிற்றில் தண்ணீர் கூட அருந்தாமல் அந்த இரண்டு எலுமிச்சம் பழங்களில் இருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்து அதை நான்காக மேற்புறம் மட்டும் கீரி அதற்குள் ஒரு கல் உப்பு மூன்று மிளகு வைத்து அந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே சாப்பிட்டுவிட வேண்டும். இந்த முறையில் பத்ரகாளி அம்மனை முழுமனதோடு நினைத்து நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:தை செவ்வாய் கிழமை துர்க்கை பரிகாரம்
குழந்தை செல்வத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் முழு மனதோடு பத்திரகாளி அம்மனை தைமாத செவ்வாய்க்கிழமை அன்று இந்த முறையில் வழிபாடு செய்ய விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்