நீங்கள் நினைத்து நடக்க, சொத்துகள் அதிகம் சேர இம்மந்திரம் துதியுங்கள்

kulasundhari-amman

ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து செல்வம் ஈட்ட வேண்டிய கட்டாயம் தற்காலத்தில் அனைவருக்குமே உள்ளது. அப்படி ஈட்டிய செல்வத்தை கொண்டு நிலம் மற்றும் இன்ன பிற சொத்துக்களை வாங்குவது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக பலர் கருதுகின்றனர். ஆனால் எல்லோராலும் இந்த வகையில் சொத்துக்களை சேர்க்க முடியாததற்கு காரணம் அவர்களுக்கு தெய்வங்களின் அருள் இல்லாமல் இருப்பது தான். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் வழங்கும் அன்பு உள்ளம் கொண்டவள் குலசுந்தரி தேவி. அந்த தேவியை வழிபடுவதற்குரிய குலசுந்தரி காயத்ரி மந்திரம் இதோ.

kaligambal

குலசுந்தரி காயத்ரி மந்திரம்

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

நமது உடலில் இருக்கும் குண்டலினி சக்தியே குலசுந்தரி தேவியாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்லலாம். எனினும் மந்திரம் சித்தியாக மாதத்தில் வருகின்ற வளர்பிறை நவமி திதி தினம் மற்றும் தேய்பிறை சப்தமி தினத்திலும் இந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

bhuvaneswari amman

மனிதர்களின் உடல் இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பு என்பது சித்தர்களின் கருத்து. அப்படியான இந்த மனித உடலில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற ஏழு ஆதார சக்திகளை இயக்கி, குண்டலினி சக்தியை மேல் எழும்ப செய்து. இறை தரிசனம் பெற்று பிறவா பேரின்ப அடையவே சித்தர்கள் யோகம், தியான கலைகளை கண்டுபிடித்தனர். அதில் குண்டலினி சக்தியையே குலசுந்தரியாக போற்றி நம் சித்தர்கள் வழிபட்டனர். அந்த குலசுந்தரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதித்து வழிபடுவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
விரும்பியபடி வாழ்க்கை துணை அமைய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kulasundari gayatri mantra in Tamil. It is also called as Kulasundari devi mantra in Tamil or Ambal manthirangal in Tamil or Selvam peruga manthiram in Tamil or Sothukal serka manthiram in Tamil.