இருவர் இணைந்து ஜோடியாக நூறு விக்கெட்டுகளை இவ்வளவு விரைவாக வீழ்த்துவது அரிதானது – பி.சி.சி.ஐ வாழ்த்து

bay-oval
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.

நியூசிலாந்து அணியின் அனைவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். டெய்லர் மற்றும் லேதம் ஜோடி மட்டும் அந்த அணிக்கு ஆறுதல் தரும் விதமாக ஆடி அணியை ஓரளவிற்கு நல்ல ஸ்கோர் குவிக்க உதவினர். டெய்லர் 93 ரன்களும், லேதம் 51 ரன்களை அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 243ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் பாண்டியா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் சாஹல் எடுத்த 2 விக்கெட்டுகளோடு இந்திய அணியின் சுழற்பந்து ஜோடியான சாஹல் மற்றும் குலதீப் இணைந்து 26 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளனர். இதனை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்தியுள்ளது. இதோ அந்த பதிவு :

- Advertisement -

இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக இடம்பிடித்த இந்த இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தங்களது உலகக்கோப்பை இடத்தினை உறுதி செய்துள்ளனர் என்றே கூறலாம்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சில் சதத்தை தவறவிட்ட டெய்லர். மீண்டும் 50 ஓவர் ஆடமுடியாமல் ஆல்அவுட் ஆன நியூசி அணி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -