இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சில் சதத்தை தவறவிட்ட டெய்லர். மீண்டும் 50 ஓவர் ஆடமுடியாமல் ஆல்அவுட் ஆன நியூசி அணி

shami

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.

இந்த போட்டியிலும் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை அளிக்க தவறியது. அந்த அணியின் முன்ரோ 7 ரன்கள் அடித்து ஷமி பந்தில் வெளியேறினார். பின் குப்தில் ஷமி கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. குப்தில் 13 ரன்கள் அடித்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ராஸ் டெய்லர் மற்றும் லேதம் இணைந்து சிறப்பான கூட்டணி அமைத்தனர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்களை குவித்தது. பிறகு, டெய்லர் சதம் அடிக்கும் தருவாயில் அருமையான வாய்ப்பினை 93 ரன்னில் நழுவ விட்டார். ஷமி வீசிய பவுன்சரை சரியாக கணிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் கார்த்திக் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

mohammed-shami

அவருக்கு உறுதுணையாக லேதம் 511 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக 243 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மீண்டும் ஒரு முறை 50 முடியாமல் வெளியேறினர்.

இதையும் படிக்கலாமே :

காற்றில் டைவ் அடித்து மிரட்டலான கேட்ச் பிடித்து அசத்திய ஹார்டிக் பாண்டியா – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்