தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது . எங்கள் அணியின் தோல்விக்கு இவைகளே காரணம் – கேன் வில்லியம்சன்

kane-williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

sami

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

ஆட்டம் முடிந்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் : இந்த தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தினை அளித்திருக்கிறது. இந்த மைதானம் பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாகும் எனவே 300ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம். இதற்கு முழு காரணமும் எங்களது பேட்டிங் யூனிட்டே காரணம்.

chahal

மேலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றுவிட்டனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் வீசிய ஓவர்களில் ரன்களை குவிக்க சிரமமாக இருந்ததோடு மட்டுமின்றி விக்கெட்டுகளையும் பறிகொடுத்தோம் அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இதுவே எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் ஆட்டநாயகன் விருது பெற்ற – முகமது ஷமி பேட்டி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -