குலதீப் யாதவ் உலககோப்பை போட்டிகள் அனைத்திலும் பங்கேற்பார் – ரவி சாஸ்திரி

worldcup

இங்கிலாந்து நாட்டில் இந்த வருடம் 50 ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன. மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கான அணியை கட்டமைக்க அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து வருகிறார்கள். இந்திய அணியும் தங்களது பிளேயிங் லெவனை தேர்வு செய்ய உள்ளது.

kuldeep 1

இப்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : இந்திய அணியின் வீரர்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதனால் இந்திய அணி தேர்வு செய்வது சற்று கவனமாக கையாள்கிறோம். இந்த நிலைமை அணிக்கு ஆரோக்கியமே மேலும் இந்திய அணியின் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் நிச்சயம் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்றார்.

சைனா மேன் வகை சுழற்பந்து வீச்சாளரான குலதீப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே சாஹல் உடன் சேர்ந்து ஒருநாள் அணியில் இவர் பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வினின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

kuldeep

அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று வருகிறார். ஒருநாள் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறார். மேலும் காயத்தால் அவதிப்பட்டு வரும் அஸ்வின் உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே :

என் படுக்கை அறையில் “காண்டம்” இருப்பதை என் அம்மா கண்டுபிடித்து விட்டார் – ராகுல்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்