என் படுக்கை அறையில் “காண்டம்” இருப்பதை என் அம்மா கண்டுபிடித்து விட்டார் – ராகுல்

Ash

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களான KL ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பல சர்ச்சையான விடயங்களை இருவரும் நகைச்சுவையாக பேசினார்கள். ஆனால், இந்த கருத்திற்கு தற்போது விமர்சங்கள் எழுந்து வருகின்றது.

KL and HP

அந்த நிகழ்ச்சியில் ஹர்டிக் பாண்டியா சியர் லீடர்ஸ் பார்த்தால் தடம் மாறுவார் என்றும் நிறைய பெண்களுடன் சேட் செய்வார் என்றும் ராகுல் கூறினார். பாண்டியாவும் தனது நட்பு குறித்து பதிலளித்தார். அந்த நிகழ்ச்சி முழுவதும் பெண்கள் குறித்த கருத்துக்களை கூறிவந்தனர். இது தற்போது பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ளது.

அந்த ஷோவில் ராகுல் கூறியதாவது : ஒருமுறை என் படுக்கை அறையில் சுத்தம் செய்ய வந்த என் அம்மா காண்டம் இருப்பதை பார்த்துவிட்டார் பிறகு அதை நான் மறைத்து வைத்து விட்டேன். என்று கூறினார் ராகுல் பலபேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த ராகுல் மற்றும் பாண்டியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

rahul

மேலும் 24 மணிநேரத்திற்குள் இது குறித்து விளக்கம் அளிக்க அவர்கள் இருவரும் நோட்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் அனுப்ப பட்டுள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசவேண்டும் என்றும் அறிவுரையை வழங்கியுள்ளது.

இதையும் படிக்கலாமே :

ரிஷப் பண்டை தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்த ரோஹித் – ட்வீட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்