உங்கள் வீட்டில் தங்கம் கிடு கிடுவென சேர வேண்டுமா? அப்படியானால் இந்த நேரத்தில் ஒரு முறை தங்கம் வாங்கி பாருங்கள். உங்களுக்கு வேண்டிய அளவிற்கு தங்கம் வந்து சேரும்

- Advertisement -

பொதுவாகவே நாம் எந்த பொருளை வாங்கினாலும் நேரம், காலம் பார்த்து வாங்குவது தான் வழக்கம். அதிலும் தங்கம் வாங்கும் போது நாள், கிழமை, நட்சத்திரம் போன்ற அனைத்தையும் பார்த்து வாங்குவோம். ஏனெனில் தங்கம் வீட்டில் மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுவதால், தங்கத்தை வாங்கும் போது நாம் அதற்குரிய நேரத்தில் வாங்கினால் மட்டுமே, அது மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.

நல்ல காரியங்கள் தொடங்குவதற்கும், நிலம், கட்டிடம், வாகனம் வாங்குவது, தொழில் துவங்குவது போன்ற ஏதுவாக இருந்தாலுமே அதற்கான கால நேரத்தில் பார்த்து வாங்கினால் தான் அவை பன்மடங்கு பெரும், அப்படி வாங்க கூடிய நேரங்களில் ஒன்று தான் குளிகை.

- Advertisement -

பொதுவாகவே குளிக்கையில் எதுவும் செய்யக்கூடாது என்று பொத்தாம் போக்காக சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு நாளிலும் ராகு காலம், எம கண்டம், நல்ல நேரம் போன்றவை இருப்பதைப் போல் குளிகைக்கும் கால நேரம் உண்டு. சரி ராகு காலம் எமகண்டத்தில் நல்லது செய்யக்கூடாது, இதை செய்வதற்கு நல்ல நேரம் என்று தனியாக இருக்கும் போது, இந்த குளிகை என்பது என்ன? ஏன் அந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது என்பதை முதலில் பார்ப்போம்.

இராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்று பிரசவிக்கும் தருணம், இராவணன் இந்த உலகத்தில் யாராலும் வெல்ல முடியாத பேராற்றல் மிக்க ஒருவன் தான் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என நினைத்தான். அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என குலகுருவான சுக்கிராச்சியாரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அதற்கு சுக்ராச்சாரியார் ஒன்பது கோள்களும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனது மகன் பிறந்தால் அவ்வாறு இருப்பான் என்று கூறினார். உடனே இராவணனும் நவகிரகங்கள் ஒன்பது பேரையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தார் ஆனாலும் மண்டோதரிக்கு பிரசவ வலி அதிகமானதே தவிர குழந்தை பிறக்கவில்லை.

- Advertisement -

இதை கேள்விப்பட்ட நவகிரகங்கள், இதற்கும் நாம் தான் காரணம் என்று எண்ணி இராவணன் நம்மை தண்டிப்பானோ என்று அஞ்சினர். உடனே அவர்களும் அது குறித்து சுக்கிராச்சாரியார்யிடமே முறையிட்டனர். உடனே சுக்ராச்சாரியார், நவகிரகங்களான உங்களை தவிர நன்மை செய்ய கூடிய ஒருவனை புதிதாக நீங்கள் உருவாக்கினால், அவன் உதிக்கும் நேரத்தில் மண்டோதரிக்கும் குழந்தை பிறக்கும், ராவணனும் உங்களை விடுதலை செய்து விடுவான் என்று கூறினார். உடனே சனி பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தி மூலம் தனது மனைவி ஜேஸ்திடா தேவியின் வயிற்றில் ஒரு ஆண் மகனை பிரசவிக்க செய்தார். அவன் தான் குளிகை. அதே நேரத்தில் மண்டோதரிக்கும் ஒரு மகன் பிறந்தான். இதனால் மகிழ்ந்த இராவணன் நவகரங்களை விடுதலை செய்தான். பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்து பிறந்தபடியால் ஒவ்வொரு நாளிலும் குளிகனுக்காக ஒதுக்கிய நேரம் தான் இந்த குளிகை. இந்த நேரத்தை காரிய விருத்தி நேரம் என்றும் சுக்கிராச்சாரியார் ஆசீர்வதித்தார். இதுவே குளிகை நேரத்திற்கான புராண கதை.

குளிகை நேரத்தில் கெட்ட காரியங்கள் அதாவது இறந்தவரின் சடங்கு, உடலை எடுத்து செல்வது, இதுபோன்ற காரியங்கள் செய்தால் அது திரும்ப திரும்ப தொடரும். மற்றப்படி சுபகாரியங்கள் அனைத்தும் இந்த குளிகை நேரத்தில் தொடங்கலாம். குளிகை நேரத்தில் எதை செய்தாலும் அது இரட்டிப்பாகும். கடன் வாங்கினாலும் இரட்டிப்பாக மாறும் நகை வாங்கினாலும் இரட்டிப்பாக மாறும். இப்படி இந்த குளிகை நேரத்தில் எதை செய்தாலும் இரட்டிப்பாகும் என்பதை அறியாத சிலர் பொதுவாக குளிகையில் எதையும் செய்யக்கூடாது என்று கூறி விடுகிறார்கள். ஆனால் குளிகையில் வாங்கப்படும் எந்த ஒரு பொருளும் மறுபடியும் மறுபடியும் வாங்கும் வாய்ப்பை உருவாக்கித் தரும். எனவே தான் இந்த குளிகை நேரத்தில் நாம் தங்கம் வாங்கினால் நம் வீட்டில் தங்கம் திரும்ப திரும்ப வாங்கும் யோகத்தை பெறுவீர்கள்.

- Advertisement -