நீங்கள் தினமும் குளிக்கும் போது, எந்த திசையை நோக்கி குளிக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? இந்த திசையை நோக்கி குளித்தால் கஷ்டம் உங்களை விட்டுப் போகவே போகாது!

bathing
- Advertisement -

நம்முடைய அன்றாட வாழ்வில் காலை நேரத்தில், குறிப்பிட்டு சொல்லப்போனால் சூரிய உதயத்திற்கு முன்பாகவே, நம்முடைய ஸ்நானத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இதுவே சரியான முறையும் கூட. குளிப்பது என்பது தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு, உடலை சுத்தம் செய்வதற்காக மட்டும் அல்ல. நமக்கு அன்றாட வாழ்வில், இயற்கையாக ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கவும் தான் குளியல். இந்த குளியலை முறைப்படி எப்படி குளிப்பது? எந்தெந்த திசைகளை நோக்கி குடித்தால் என்னென்ன பலன்களை நம்மால் பெற முடியும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bathing

பொதுவாகவே, சிறந்த ஸ்நானமாக சொல்லப்படுவது கங்கா ஸ்நானம் தான்‌. எல்லோராலும் இந்த கங்கா ஸ்நானத்தை செய்து விடமுடியாது. கங்கை நதியில் போய் மூழ்கி எழுந்த வர்களுக்கு, பாவங்கள் நீங்கிவிடும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால், தினந்தோறும் நம் குளியலறையில் குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் கங்கையில் ஓடுகின்ற நதிக்கு நிகராக மாற்றமுடியும்.

- Advertisement -

நீங்கள் குளிக்கின்ற பக்கெட்டில் இருக்கும் தண்ணீருக்கு அருகில் சென்று, ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். அப்படி இல்லை என்றால் உங்களது ஆள்காட்டி விரலால் அந்த தண்ணீரில் ‘ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை எழுதிவிட்டு அதன் பின்பு அந்த தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தினம்தோறும் இந்த முறையை பயன்படுத்தி, இந்த தண்ணீரில் ஸ்னானம் செய்து வருபவர்களுக்கு எந்த ஒரு தோஷமும் அண்டாது என்று சொல்கிறது சாஸ்திரம்.

bathing

அடுத்தபடியாக உங்கள் வீட்டு குளியலறை எந்த திசை நோக்கி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். நீங்கள் தினந்தோறும் குளிக்கும் திசை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தால் உங்களுக்கு அன்றைய தினம் யோகமான தினமாக அமையக்கூடும். அதாவது நீங்கள் அமர்ந்து குறிக்கக்கூடிய திசை என்பது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

மற்றபடி ஈம சடங்குகளுக்கு வெளியில் சென்று வருபவர்கள் மட்டும் தான் தெற்கு திசையை நோக்கி குளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் தெற்கு திசை நோக்கி குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

bathing

மேற்கு திசையை நோக்கி தினம்தோறும் குளித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் அதிகரிக்கும். உடலில் நோய்கள் வந்தாலும் அது சுலபமாக நம்மை விட்டுப் பிரியாது. உடல்வலி, சோம்பல், சுறுசுறுப்பற்ற தன்மை நம்முடன் ஒட்டிக்கொள்ளும். முடிந்தவரை மேற்கு திசையை நோக்கி குளிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். மேற்கு நோக்கி குளித்து வருபவர்களுக்கு கஷ்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

இப்படியாக குளிப்பதில் கூடவா எத்தனை முறை என்று அலுத்துக் கொள்ளாமல், இப்படி குளிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற சிந்தனையோடு நம்பிக்கையோடு இந்த முறையை உங்களுடைய வாழ்க்கையிலும் பின்பற்றித்தான் பாருங்கள்! முன்னேற்றம் ஏற்பட்டால் தொடர்ந்து இதை பின்பற்றி வருவதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது? நல்லது நடக்க வேண்டும் என்று நாம் செய்யக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் நமக்கு நன்மையை தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தொலைந்த பொருட்களையும், கொடுத்த கடனையும் திரும்பப்பெற இப்படி ஒரு வழி உள்ளதா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -