முட்டை தொக்கு செய்வது எப்படி என்று பாப்போம்

muttai

நகரத்தில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவது இந்த முட்டை தொக்கு. ஏனெனில் மிக விரைவாக மற்றும் எளிமையாக செய்யப்படும் உணவு என்பதால் அவர்கள் இதனையே பெரும்பாலும் சாப்பிடுவார்கள். இந்த பதிவில் முட்டை தொக்கு செய்வது எப்படி என்று காண்போம்.

muttai_1

முட்டை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை – 4
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – 1/4 ஸ்பூன்

முட்டை தொக்கு செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு அதனுடன் வெந்தயம், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து உப்பு போட்டு மிண்டும் நன்றாக வதக்கவும்.

muttai_2

- Advertisement -

பிறகு கொஞ்சம் மஞ்சள் தூள் தூள் செர்த்து கிளறி அதனை மூடி வைக்கவும். அப்போதுதான் கடாயில் உள்ள அனைத்தும் நன்றாக வதங்கும். பிறகு நன்றாக வெந்ததும் அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

muttai_3

பிறகு தண்ணீர் ஊற்றி அதனுடன் வேகவைத்த முட்டையினை கீறி அதனுடன் சேர்க்கவும் அப்போதுதான் மசாலா முட்டையில் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். பிறகு அதனை 10 நிமிடங்கள் வரை வேக விட்டு கொத்தல்லி தூவி இறக்கினால் சுவையான முட்டை தொக்கு தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

2019 ஆம் ஆண்டு ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

இதையும் படிக்கலாமே:
எக் 65 செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Muttai thokku recipe in Tamil. It is also called as Muttai thokku ingredient in Tamil or Muttai thokku seimurai in Tamil or Muttai thokku seivathu eppadi in Tamil.