மொகலாயர்களிடம் இருந்து காசியை மீட்டெடுத்த தமிழ் சித்தர் பற்றி தெரியுமா ?

kumarakurubarar-1
- Advertisement -

சித்தர்களும், மகான்களும் தங்களின் நோக்கத்திற்காக இந்த பூவுலகில் பிறப்பதில்லை. அவர்கள் முன்னமே அடைந்த அந்த இறையானந்தத்தை நாமும் அடைய நமக்கு வழிகாட்டவே இந்த மண்ணில் அவதரிக்கின்றனர். அதுவும் நம் தமிழ் நாட்டில் எத்தனையோ சித்தர்கள் பிறந்து நம் மக்களுக்கு நன்மைகள் பல செய்திருக்கின்றனர். சமயங்களில் பல சித்துக்களையும் செய்திருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் மொழிக்கும், சைவ மதத்திற்கும் சேவை செய்தவரும், சிங்கத்தின் மீது அமர்ந்து வலம் வந்த ஸ்ரீ குமரகுருபரரை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

 

- Advertisement -

17 ஆம் நூற்றாண்டில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் “ஸ்ரீவைகுண்டம்” எனும் ஊரில் பிறந்தவர்தான் “குமரகுருபரர்”. இவர் பிறந்து ஐந்து வயதாகும் வரை பேசும் திறனற்று இருந்தார். இதனால் வேதனையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரை வணங்கினர். அவரின் அருளாற்றலால் சில தினத்திலேயே பேச ஆரம்பித்ததோடு மட்டுமில்லாமல், கவித்திறத்துடன் பாடல்களை பாடும் வரத்தையும் பெற்றார் குமரகுருபரர். இவரது திறமையை அறிந்த மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் தனது அரசவைக்கு அழைத்தார். அதன் பேரில் அங்கு சென்ற குமரகுருபரர் அங்கு சிறந்த தமிழ் பாடலை பாடி அந்த மன்னனால் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

ஞானத்தேடலில் அதிகம் ஈடுபட்டிருந்த குமரகுருபரர் பாரதம் எங்கும் பயணம் செய்தார். அப்போது அவர் காசி நகருக்கு சென்றிருந்த சமயம் அந்த புனிதமான காசி நகரத்தின் சிவன் கோவிலும், அதன் சம்பிரதாயம் மற்றும் இந்து மதமே முகலாயர்களின் அடக்குமுறையால் மிகவும் ஷீணமடைந்திருந்தது. இந்த நிலையை மாற்ற நினைத்த குமரகுருபரர் அந்த முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால் அவர்களிடம் பேச அவர்களின் இந்துஸ்தானி மொழி தமக்கு தெரியாததை குறித்து வருந்தினார். உடனே தான் வணங்கும் “சரஸ்வதி” தேவியை வணங்கி “சகலகலா வல்லி மாலை” எனும் பாடல் தொகுப்பை பாட அந்த தேவியின் அருளால் வடமொழி பேசும் திறன் பெற்றார்.

- Advertisement -

kumarakurubarar

 

அதே நேரம் இந்த முகலாயர்களின் இறுமாப்பை அடக்க எண்ணிய குமரகுருபரர் தனது சித்தாற்றலால் ஒரு சிங்கத்தை வசியம் செய்து, அதன்மீதமர்ந்து முகலாய மன்னனின் அரசவைக்கு சென்று, அந்த மன்னனிடம் தனது விருப்பத்தை அவர்களின் வடமொழியிலேயே எடுத்து கூறினார். இக்காட்சியை கண்டு அதிர்ந்த அந்த முகலாய மன்னன் குமரகுருபரர் நிச்சயம் ஒரு சித்த புருஷர் என்று தீர்மானித்து அவர் விரும்பியவாறு சிவன் கோவில் மற்றும் மடம் கட்ட அனுமதியளித்தான். பல ஆண்டு காலம் அக்காசியிலேயே தங்கி சைவ சமயத்திற்கு சேவை செய்த குமரகுருபரர் இறுதியில் அங்கேயே சமாதியடைந்தார்.

- Advertisement -