2021 புத்தாண்டு பலன்கள் – கும்பம் ராசி

new-year-kumbam

கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்து செல்ல இருக்கும் 2020-ஆம் ஆண்டு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள்வதற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பீர்கள். உங்களுடைய ராசிக்கு சனி பகவான் 12-வது இடத்தில் அமர்ந்து இருப்பார். அது போல் குரு பகவான் ஏப்ரல் வரை உங்கள் ராசியிலும், அதன் பின்னர் பத்தாம் இடத்திற்கும் நகர்ந்து செல்கிறார். ராகு பகவான் நான்கிலும், கேது பகவான் பத்தாவது வீட்டிலும் அமர்ந்து இருப்பார்கள். மற்ற கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கும். இவ்வகையில் உங்களுடைய ராசிக்கு புத்தாண்டு எப்படி அமையப் போகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

Kumbam Rasi

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை தேவைகளுக்கு ஏற்ப பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை திருப்தி படுத்துவீர்கள். சொந்த வீட்டில் இருப்பவர்கள் குடும்பத்தை பிரியும் நிலை ஏற்படலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக அமைய இருக்கிறது. உங்களுக்கு பிறகு பிறந்த உடன் பிறப்புகளிடம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலம் பாதி பிரச்சினையை தீர்த்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி பெறலாம்.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுடன் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் மற்றும் பங்குதாரர்கள் போன்றவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். சுய தொழிலில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல லாபம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

business-shop

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் ஏப்ரல், மே மாதங்களில் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதங்களில் மனதிற்குப் பிடித்த வேலை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய திறமைக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம், இனி நிச்சயமாக கிடைக்கப் போகிறது. உங்களிடம் இருக்கும் அறிவாற்றலை மற்றவர்கள் தெரிந்து கொண்டு பாராட்டுக்களை கொடுக்கப் போகிறார்கள். பதவி உயர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஆண்டின் இறுதியில் அமையும்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் உங்கள் கைக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஆண்டின் தொடக்கத்தில் நிச்சயமாக இருக்கும். படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு. அதே சமயத்தில் வருமானம் குறையவும் சாத்தியக் கூறுகள் உண்டு. இவ்வாண்டு சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது. வருகின்ற விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொண்டால் பிரச்சினைகள் இருக்காது.

marraige-couple

பெண்களுக்கு:
பெண்களைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையேயான புரிதல் உண்டாகும். தன் கையே தனக்கு உதவி என்பது போல் உங்களுடைய தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிடாமல் மென்மேலும் மெருகேறுவதற்கு வாய்ப்புகள் அமையும். சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவிப்பீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதனை சிறப்பாக கையாண்டு சுமூகமான முடிவை கொடுப்பீர்கள்.

astro wheel 1

பரிகாரம்:
கும்ப ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு இவ்வாண்டு மேலும் சிறப்பாக அமைய பசுவுக்கு தானம் செய்யலாம். சனிக்கிழமை தோறும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு படைத்து வர நன்மைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்து வர அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். உங்களால் முடிந்த அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள் நல்லது நடக்கும்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – மகர ராசி

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்