2021 புத்தாண்டு பலன்கள் – மகர ராசி

new-year-magaram

மகர ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற 2020-ஆம் ஆண்டில் ஜோதிட பலன்கள் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். உங்களுடைய ராசிக்கு சனிபகவான் சொந்த வீட்டிலேயே இருப்பார். ராசியாதிபதி சனி பகவான் ஆண்டின் தொடக்கத்தில் குருவுடன் சேர்ந்து இருந்து பின் குருபகவான் மட்டும் பெயர்ச்சி ஆவார். ராகு 5வது இடத்திலும், கேது 11வது இடத்திலும் அமர இருக்கின்றார்கள். செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

magaram-rasi

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் குறிப்பாக, தாயின் உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய ரீதியான செலவுகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சனி பகவான் உங்கள் ராசியிலேயே இருப்பதால் வீடு, மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். அப்படி வாங்கும் பொழுது ஒன்றுக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு வாங்குவது மிகவும் நல்லது.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் மகர ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ராசியாதிபதி சனி ராசியில் அமர்ந்திருப்பதால் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை உடனுக்குடன் பெற சாத்தியக்கூறுகள் உண்டு. இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப பலனும் கிடைக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அகலக்கால் வைக்க சிறந்த காலம் இது. தைரியமாக முடிவெடுத்து முன்னேற பாருங்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தால், அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் நிறைய விஷயங்களையும் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.

office

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலர் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல், நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மன நிம்மதியுடன் இருக்கலாம். இல்லையென்றால் வம்பு வழக்குகளில் மாட்டி தவிப்பீர்கள்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் மகர ராசிக்காரர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் சமமாக வந்து சேரும். ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த ஆண்டில் கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் எந்த அளவிற்கு குறைத்துக் கொள்கிறீர்களோ! அந்த அளவிற்கு நல்ல பலன்களையும் பெறலாம். இருப்பதை வைத்து திருப்தி அடைவதே மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். ஆடம்பர செலவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் கடன் தொல்லை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடும்.

counting-cash

பெண்களுக்கு:
பெண்களைப் பொறுத்தவரை மகர ராசிக்கு யோகமான பலன்கள் உண்டு. உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெறுவதற்கான காலமிது. நீண்ட நாள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

sevvai

பரிகாரம்:
இறை வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானை தரிசித்து, அவருக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி வழிபட்டால் சுபச்செய்திகள் வந்து சேரும். உங்கள் ராசிப்படி ரத்த தானம் செய்து வர பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – தனுசு ராசி

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்