மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாளில் கும்பகோணத்தில் மாசி மக உற்சவம் நடைபெறும். மாசிமகாமகம் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறக்கூடியதாக திகழ்கிறது. இருப்பினும் ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மாசி மக நட்சத்திர நாள் அன்று கும்பகோணம் சென்று அங்கிருக்க கூடிய குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனை பெறுவோம். இந்த பலனை பெறுவதன் மூலம் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் அந்த கும்பகோண குளத்தில் குளித்த பலனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கும்பகோணம் குளத்தில் குளித்த பலன் கிடைக்க
மக நட்சத்திர நாளில் தான் பார்வதி அம்மன் தட்சனின் மகளாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் கும்பகோணத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்தின் குளத்தில் பலரும் நீராடி இறைவனை வழிபாடு செய்வார்கள். இவ்வாறு நீராடுவதன் மூலம் அனைத்து விதமான புண்ணிய நதிகளிலும் நீராடியதற்குரிய பலன் கிடைக்கும் என்றும் அதனால் பாவங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது. அனைவராலும் கும்பகோணம் சென்று குளிக்க முடியாதல்லவா? அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாசி மகத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயமாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்தில் கலசத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி அனைத்து நதிகளையும் ஆவாகனம் செய்து அதன் மூலம் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்படி அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அங்கு வரும் பக்தர்களுக்கும் தெளிப்பார்கள். ஒருவேளை நம்முடைய வீட்டிற்கு அருகே இப்படி பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இல்லை என்பவர்களும் கும்பகோணம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்களும் இந்த பலனை பெறுவதற்கு வீட்டிலேயே சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
அன்றைய தினத்தில் காலையில் குளிக்கும் பொழுது குளிக்கும் தண்ணீரில் கையை வைத்துக் கொண்டு புனித நதிகளின் பெயரை கூற வேண்டும். பிறகு குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு கலச சொம்பை வைத்து அது நிறைய தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அந்த கலச சொம்பிற்கு மேல் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு புண்ணிய நதிகளின் பெயரையும் கூறி ஆவாகனம் செய்ய வேண்டும். அதாவது கங்கை ஆவாகனமாமி என்று கங்கை, சரஸ்வதி, யமுனா என்று தங்களுக்கு எந்தெந்த புனித நதிகளின் பெயர்கள் தெரியுமோ அவர்களின் பெயர்களை கூறி ஆவாகமாமி என்று கூறவேண்டும்.
இப்படி கூறுவதன் மூலம் அந்த புண்ணிய நதிகள் நாம் வைத்திருக்கும் தண்ணீருக்குள் ஆவாகனம் செய்யப்படும். பிறகு இந்த தண்ணீரை எடுத்து நம்முடைய தலையிலும் வீடு முழுவதும் தெளிப்பதன் மூலம் கும்பகோணம் குளத்தில் குளித்ததற்குரிய பலன் கிடைக்கும். மேலும் அன்றைய தினம் அம்மன் அவதரித்த தினம் என்பதால் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. எந்த ஒரு பெண் தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் சிலைகள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அபிஷேகம் செய்து மலர்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:வீடு கட்ட தடை வராமல் இருக்க
பல ஆலயங்களில் மிகவும் சிறப்பான வழிபாடுகள் மேற்கொள்ளக்கூடிய நாளான மாசி மக நாள் அன்று நாமும் நம்முடைய வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்து நம்முடைய பாவங்களை நீக்குவதோடு வேண்டிய வரத்தையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.