கடுமையான வெயிலிலும் குளிர்ந்த நிலையிலே உள்ள அதிசய கோவில்

Sivan-temple-1

ஆன்மிக பூமியான நம் பாரத நாடு, இறைவனை நோக்கிய தேடலிலிருப்போர்க்கு பல வகையான தெய்வீகத்தன்மையான ஆச்சர்யங்களை அவர்கள் காண அளித்துக்கொண்டேயிருக்கும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் கோவில்கள் ஒவ்வொன்றும் நிச்சயம் தெய்வத் தன்மை கொண்டது தான் என்றாலும் சில கோவில்கள் மட்டும், அங்கு நிகழும் சில அதிசயங்களால் புகழ் பெற்றுவிடுகிறது. அப்படியான ஒரு ஆச்சர்யமான கோவிலைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Sivan temple

ஒரிசா மாநிலத்தில், “டிட்லாகர்” மாவட்டத்தில் “கும்ஹாடா” என்கிற குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. எனவே இக்கோவிலை “கும்ஹாடா கோவில்” என்றே இந்த ஊர்மக்கள் அழைக்கின்றனர். மிகவும் பழமையானதாக கருதப்படும் இக்கோவிலின் இறைவனாக, “சிவ பெருமானும்”,”பார்வதி தேவியும்” உள்ளனர். தினமும் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

இந்த கோவிலின் விசேஷமே இக்கோவிலுக்குள் எப்போதும் 15 டிகிரியிலிருந்து 10 டிகிரி வரையிலான குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுவது தான். இத்தனைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் இந்த ஒரிசா மாநிலத்தில் கோடைகாலங்களில் 40 திலிருந்து 48 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும். ஆனால் அப்படியான காலங்களிலும் இக்கோவிலுக்குள் கம்பளி ஆடை அணிந்து கொண்டு, இக்கோவிலின் தெய்வங்களுக்கு தாங்கள் பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்யும் சூழல் ஏற்படுவதாக இக்கோவில் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

Sivan temple

அதிலும் இக்கோவிலின் கதவை அடைத்து விட்டால், தாங்க முடியாத அளவிற்கு இங்கு குளிர் அதிகரிப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டும் இத்தகைய அதிசயம் நிகழ்வதற்கு இங்கிருக்கும் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலையிலிருந்து வெளிப்படும் தெய்வீக சக்தியே காரணம் என இங்கு வரும் பக்தர்களின் திடமான நம்பிக்கையாக உள்ளது.