குன்றா செல்வ வளத்தை கொடுக்கும் குன்றின்மணியை கூடவே இப்படி வைத்துப் பாருங்களேன். வராத அதிர்ஷ்டம் கூட உங்களைத் தேடி வரும்.

Kundrimani
- Advertisement -

அதீத நல்ல சக்தியை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கக் கூடிய ஒரு பொருள்தான் குன்றின்மணி. இதை சில பேர் குண்டுமணி என்று கூட வழக்கத்தில் சொல்லுவார்கள். குன்றின்மணி இருக்கக் கூடிய இடத்தில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிள்ளையார் செய்து அவருடைய கண்களை திறக்க, அதாவது மண் பிள்ளையாருக்கு கண்ணாக இந்த குன்றின்மணியை தான் வைப்பார்கள். இந்தக் குன்றின்மணி சுலபமாக நமக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான குன்றின்மணி வெள்ளை நிற குன்றின்மணி, கருப்பு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குன்றின்மணி. கூடவே கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை நிறக் குன்றின் மணியை அந்த அம்பாளுக்கு நிகராக சொல்கிறார்கள். அம்மனின் சக்தி இந்த குன்றின்மணியில் உள்ளதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த வெள்ளை குன்றின்மணி நம்மிடம் தோல்வியை நெருங்க விடாது. மன தைரியத்தை கொடுக்கக் கூடியது.

- Advertisement -

சில பேருக்கு வியாபாரத்தில் தொடர் தோல்வி இருக்கும். சில பேர் கல்வியில் சிறந்து விளங்காமல் பின் தங்கி இருப்பார்கள். சில பேருக்கு கடன் சுமை இருக்கும். சில பேர் தொட்ட காரியத்தில் எல்லாம் தோல்வி. புதிய முயற்சிகள் வெற்றியே அடையாமல் துவண்டு போவார்கள். தொடர் தோல்வியால் துவண்டு போய் இருப்பவர்கள் இந்த வெள்ளை குன்றின்மணியை கையோடு வைத்துக் கொண்டால் அவர்கள் சீக்கிரத்திலேயே வெற்றி வாகையை சுட கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கருப்பு சிவப்பு நிறத்தில் இருக்கும் குன்றின்மணி நமக்கு குன்றா செல்வ வளத்தை கொடுக்கும். எந்த கெட்ட சக்திகளும் நம்மை அண்டாமல், தரித்திரத்தை துரத்தி அடிக்க கூடிய சக்தி இந்த சிவப்பு கருப்பு குன்றின் மணிக்கு இருக்கிறது. பிறகு இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் நமக்கு தேவை. செம்பில் ஒரு தாயத்தை வாங்கி அதில் வெள்ளை குன்றின்மணி 2, சிவப்பு குண்டின் மணி 2, சிறிய பச்சை கற்பூரம் போட்டு, தாயத்தை மூடி இதை ஒரு கயிறில் கோர்த்தோ அல்லது செயினில் கோர்த்து பூஜை அறையில் வைத்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு இந்த தாயத்தை எடுத்து உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ளலாம். கழுத்தில் கட்டிக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். தாயத்தை இடுப்பில் கட்டுவதாக இருந்தால் சிவப்பு கயிறில் கட்டிக் கொள்ளுங்கள். கையில் கட்டுவதை விட இந்த தாயத்தை இடுப்பில் கட்டுவது இரண்டு மடங்கு பலனை நமக்கு கொடுக்கும். வாழ்வில் எல்லாமே திருப்தி இல்லாமல் இருக்கின்றது. மன கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் இந்த தாயத்தை கட்டிப்பாருங்கள். நிச்சயமாக வாழ்வில் நீங்கள் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்கள் உங்களைத் தேடி வரும்.

இறுதியாக குன்றின்மணியை பற்றிய இன்னொரு குறிப்பையும் தெரிந்து கொள்வோம். குன்றின் மணி வகைகளில் பச்சைநிற குன்றின்மணி என்று ஒன்று உள்ளது. இந்த பச்சை குன்றின்மணி குபேரருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பச்சை நிற குன்றின்மணி அவ்வளவு எளிதாக கிடைக்காது. மார்க்கெட்டில் போலியான பச்சை நிற குன்றின்மணிகள் கிடைக்கின்றது. அதை வாங்கி ஏமாற வேண்டாம்.

ஒரிஜினலான பச்சை குன்றின்மணியை வாங்கி பூஜை அறையில் வைத்து குபேரர் நினைத்து வியாழக்கிழமை அன்று பூஜை செய்தால் குபேரரின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த பச்சை குன்றின்மணி சீக்கிரத்தில் காய்ந்து போய்விடும். காய்ந்த பின்பு அதற்கான பவரும் குறையும். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆகவே வாய்ப்பு கிடைத்தால் இந்த பச்சை நிற குன்றின்மணியை பூஜைக்கு பயன்படுத்தி பலன் பெறலாம் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -