மகாலட்சுமி விரும்பி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர வேண்டும் என்றால், இந்த 1 பொருள் பூஜை அறையில் கட்டாயம் நிறைவாக இருக்க வேண்டும்.

mahalakshmi
- Advertisement -

நம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படங்கள், காலண்டர்கள்  எல்லாம் கட்டாயம் இருக்கும். ஆனால் அந்த மகா லட்சுமியின் திருவுருவ படத்தில் எல்லாம் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறார்களோ? அப்படி வாசம் செய்தால் நம்முடைய வீட்டில் எதற்காக இவ்வளவு பண கஷ்டம்? அந்த மகாலட்சுமியை நம் வீட்டில் வந்து வாசம் செய்ய வைக்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kungumam

இது ஒரு பரிகார முறை அல்ல. நாம் அன்றாடம் செய்யக்கூடிய ஒரு வேளை தான். தங்கத்தைவிட, வெள்ளி, மகாலட்சுமி அம்சம் பொருந்தியது என்று சொல்லுவார்கள். அனேகமாக எல்லோரது வீட்டிலும் வெள்ளியில் குங்குமச்சிமிழ் இருக்கும். அந்த குங்குமச் சிமிழை எப்போதுமே நம் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்திற்கு கீழே, லட்சுமி தேவியின் பாதங்களில் குங்குமச்சிமிழை வைக்க முடிந்தால் மிகவும் நல்லது.

- Advertisement -

அந்த வெள்ளி குங்குமச் சிமிழில் எப்போதுமே குங்குமம் நிறைவாக இருக்க வேண்டும். முடிந்தால் வாசனை நிறைந்த தாழம்பு குங்குமத்தை வாங்கி அந்த குங்குமச்சிமிழ் நிரம்ப கோபுரமாக கொட்டி, குங்குமச்சிமிழ் மூடி வைக்காதீர்கள். திறந்து வையுங்கள். காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள் குளித்து முடித்து சுத்தமாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நிரம்ப இருக்கும் குங்குமத்தை, நிறைவாக மோதிர விரலாலும் கட்டை விரலாலும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் பழக்கம் வரவேண்டும்.

kungumam

வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கும் தாராளமாக நீங்கள் இந்த குங்குமத்தை கொடுக்கலாம். குங்குமத்தை அந்த குங்குமச்சிமிழில் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ அந்த குங்குமச்சிமிழை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளி குங்கும சிமிழில் உள்ளே இருக்கும் குங்குமத்தின் வண்ணத்தில், அந்த வாசத்திற்கு, எங்கிருக்கும் மகாலட்சுமி தேவியும், தேடி வந்து உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வாசம் செய்வாள் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

இப்படியாக வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் பாதத்தில் ஒரு வெற்றிலையை வைத்து அதில் குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தையும் இந்த குங்குமச் சிமிழில் போட்டு வைப்பது என்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். சில சமயம் இந்த குங்குமத்தில் வண்டு வந்து சேர்ந்துவிடும்.

kungumam-kumkum

கொஞ்சமாக கற்பூரத்தை நுணுக்கி குங்குமச்சிமிழ் அடியில் போட்டு விட்டு, அதன் மேல் குங்குமத்தைக் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் வண்டு பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாது இருக்கும்.

இதையும் படிக்கலாமே
தீராத கடன் தீர, கட்டுக்கட்டாக பணம் சேமிப்பில் இருக்க, வீண் விரயம் குறைய, உங்கள் வீட்டு உப்பு ஜாடியில் இந்த 1 பொருள் இருந்தால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -