அழகுக்கு அழகு சேர்க்கும் குங்குமத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? தாழம்பூ குங்குமம் பலன்களை கேட்டால் அவ்வளவுதான்!

meenatchi-kungumam

குங்குமம் என்பது மங்களத்தின் அடையாளமாக விளங்குகின்றது. குங்குமம் மங்கையர் சூடும் திலகம் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களும் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பாலின பேதம் இல்லாமல் குங்குமம் அனைவருக்கும் நல்ல பலன்களை தருகிறது. அழகு, ஆன்மீகம், அறிவியல் என்று அனைத்திலும் இதன் சிறப்புகள் ஏராளம் கூறிக் கொண்டே போகலாம். இந்த குங்குமத்தின் நிறம் ரத்த சிவப்பாக இருந்தாலும், இதை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்கு மனம் என்னவோ வெள்ளையாக தான் இருக்குமாம்! இத்தகைய சிறப்புகள் கொண்ட குங்குமத்தை பற்றிய தகவல்களை கேட்கும் பொழுதே நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

குங்குமத்தின் மிகப் பெரிய அடையாளமாக இருப்பது மதுரை. மதுரை குங்குமத்திற்கு ஐஎஸ்ஓ சான்றும் கிடைத்துள்ளது. 1963-ஆம் ஆண்டில் மதுரை குங்குமத்திற்கு இத்தகைய மதிப்பு கொடுக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் குங்குமம் என்றால் பிரசித்தி பெற்றதாக இன்றும் விளங்குகிறது. குங்குமத்தில் நிறைய வகைகள் இருந்தாலும் 1960 சிகப்பு நிறத்தில் மட்டும் தான் விற்பனைக்கு இருந்தது. அதன் பிறகு மெரூன், கருப்பு, பச்சை என்று பல வர்ணங்களில் அதன் நிறத்தில் மாற்றம் உண்டாக்கினர்.

1975-இல் இருந்து தாழம்பூ வாசனையை குங்குமத்தில் சேர்த்தனர். தாழம்பூ குங்குமம் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது. ஒரு துளி குங்குமம் இட்டுக் கொண்டால் அதன் நறுமணம் அன்றைய நாள் முழுவதும் நம் உடம்பில் பரவ செய்து புத்துணர்வைக் கொடுக்கும். தெய்வீக உணர்வை தூண்டக் கூடிய தாழம்பூ குங்குமம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. நினைத்ததை நடத்திக் காட்டும் யோகமும் உண்டாகும். சில குங்குமத்தில் அலர்ஜியை உண்டாக்கும் கெமிக்கல்களையும் கலப்பது உண்டு. அதனை நாம் அறிந்து கொண்டு நல்ல தூய குங்குமத்தை வீட்டில் வைத்திருப்பது வீட்டிற்கும் சுபீட்சத்தை கொடுக்கும்.

kungumam

குங்குமத்தை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்திருக்க வேண்டும். தூய குங்குமத்தை வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டில் எப்போதும் செல்வம் நிரம்பியிருக்கும். தினமும் அந்த குங்குமத்தை குடும்பத்தின் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தினமும் குங்குமம் இட்டுக் கொள்வது அவ்வளவு சிறப்புகளைத் தரும். திருமணமான பெண்கள் வெற்றியின் வகிட்டிலும், நெற்றியிலும் இட்டுக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டிற்கு இருக்கு கீழே வைக்க வேண்டும். நெற்றி பொட்டுக்கு மேலே குங்குமத்தை வைக்கக்கூடாது.

பெரும்பாலும் ஆண்கள் செந்தூரத்தை இட்டுக் கொள்வது நல்லது என்பார்கள். ஆனால் ஆண்களும் செந்தூரத்தை விட குங்குமத்தை தான் அதிகம் இட்டுக் கொள்கின்றனர். மங்கலத்தை கொடுக்கும் குங்குமத்தை இட்டுக் கொண்டு வெளியில் சென்றால் செல்லும் காரியம் ஜெயமாகும். ஒருவர் நல்ல விஷயத்துக்காக வெளியில் புறப்படும் பொழுது, அந்த வீட்டின் பெண்கள் அவர்களுக்கு நெற்றியில் குங்குமத்தை வைத்து வழி அனுப்புவார்கள். இது இராஜாக்கள் காலம் முதல் இந்த காலம் வரை நடைபெறும் ஒரு சம்பிரதாயம் ஆகும். மஹாலக்ஷ்மிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்தால் எல்லா செல்வங்களும் கிட்டுமாம்.

kungumam

குங்குமத்தில் ஈரப்பதம் படிந்தால் அது வெகு விரைவாக பூஞ்சை பிடித்து விடும். இதனால் குங்குமம் கெட்டுப் போக வாய்ப்புகள் உண்டு. எனவே அதனை தகுந்த முறையில் பாதுகாத்து வைப்பது மிகவும் நல்லது. குங்குமத்தை மொத்தமாக வாங்கவும் கூடாது. அவ்வப்போது தேவைக்கேற்ப புத்தம் புதியதாக வாங்கி வைக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் நெற்றியில் வைக்கும் பொழுது அலர்ஜி, அரிப்பு போன்ற தொந்தரவுகளும் ஏற்படாது. குண்டு மஞ்சள், வெண்காரம், படிகாரம், எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் குங்குமம் தூய குங்குமம் ஆகும். அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக இருக்கும் குங்குமம் ஆன்மீக ரீதியாகவும் பல்வேறு பலன்களை கொடுக்கக் கூடியது. இதனை அனைவரும் தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு, பூஜைக்கும் பயன்படுத்தி வந்தால் எல்லா நலன்களும் பெறலாம்.