நாளை, இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதுமே! உங்களுடைய பாவங்களில் பாதி குறைந்து விடும். புரட்டாசி சனி மட்டுமல்ல, புரட்டாசி புதனுக்கு எத்தனை மகத்துவம் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

perumal

புரட்டாசி மாதம் என்றாலே நாம் அனைவரும் அறிந்த ஒன்று, புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும் என்பது தான். ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையும் அற்புதமான நாளாக தான் சொல்லப்பட்டுள்ளது. ஒருவருக்கு அறிவு திறமை, செயலாற்றல், சுறுசுறுப்பு, சமயோஜித புத்தி, புத்திசாலித்தனம், இவைகளை கொடுப்பது புதன் கிரகம் தான். இந்த புதனின் ஆதிக்கம், எவர் ஒருவர் ஜாதகத்தில் வலிமையாக இருக்கின்றதோ கட்டாயம் அவர் திறமைசாலியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதம்.

budhan

புதன் பகவான், பெருமாளின் ஆதிக்கத்தில் இருக்கின்றார். பெருமாளுக்கு மிகவும் இஷ்டமான கிரகம் என்றால் அது புதன் கிரகம் தான். ஆக, இந்த புரட்டாசி மாதம் வரக்கூடிய கடைசி புதன்கிழமை நாளை! பெருமாளை நினைத்து இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீர்கள். புதன் பகவானின் மனதில் இடம்பிடிக்க சுலபமான வழிபாடு இது. இந்த ஒரு தீபத்தை நீங்கள் ஏற்றினால், உங்களுக்கு வரக்கூடிய கெடுபலன்கள் குறையும். உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்கும்.

பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள் அல்லவா? புதன் பகவானின் அருளாசியைப் பெற நீங்கள் சிரமப்பட வேண்டாம். நாளை ஒருநாள் காலையில் கண் விழித்து, சுத்தமாக குளித்து விட்டு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய சிறிய மண் அகல் தீபத்தை எடுத்துக் கொண்டு, அதில் பசு நெய்யை ஊற்றி குறிப்பாக வடக்கு பக்கம் பார்த்தவாறு இந்த தீபம் எரிய வேண்டும். இந்த தீபத்தை சூரிய உதயத்திற்கு முன்பாக ஏற்ற வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

deepam

முடிந்தால் நாளை பெருமாள் கோவிலுக்கு சென்று எம்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். மனதிற்குள் ‘ஓம் நமோ நாராயணா’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் உங்களுடைய ஜாதக கட்டத்தில், உங்களுடைய வாழ்க்கைக்கு தடையாக இருக்கும், தோஷங்கள் இருந்தாலும், அந்த தோஷங்கள் முழுமையாக நிறைவடைய விட்டாலும், அந்த தோஷத்தில் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு நாளை பெருமாள் வழிபாடு கை மேல் பலன் தரும் என்பதில் சந்தேகமே கிடையாது. ‘நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கக் கூடிய சக்தி நாளை ஒரு நாளுக்கு உள்ளது.’ இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாளை தவறவிடாதீர்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகள் படிப்பில் பின்தங்கி இருந்தாலும் சரி, தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, ஏதாவது துறையில் சாதனை செய்ய வேண்டும் என்றாலும் சரி, இந்த புரட்டாசி புதன்கிழமை பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பெருமாள் கோவிலுக்கு சென்று எம்பெருமானை வழிபடுவதற்கு முன்பாக, கருட பகவானை வழிபட வேண்டும். பெருமாளை வழிபாடு செய்துவிட்டு அனுமனையும் வழிபட மறந்து விடாதீர்கள். உங்களுடைய வழிபாடு முழுமை அடைய இவர்களின் ஆசிர்வாதமும் மிக மிக முக்கியம். அறிவாற்றலோடு சேர்ந்த செல்வ வளத்தையும், நீங்கள் பெறவேண்டும் என்றால் நாளை பெருமாள் வழிபாட்டை தவறவிடாதீர்கள்.

vetrilai-malai-hanuman

சிரமம் பார்க்காமல் நாளை ஒருபொழுது சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி அனைவரும் நல்ல பலனைப் பெற வேண்டும் என்று, எம்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மூக்குக்கு மேல் கோபம் வருபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோபம் குறைந்து அதிசயம் நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.