ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பு இருக்குதா? அப்படின்னா யோசிக்காம உடனடியாக இந்தக் கூரை கடை குனுக்கு செஞ்சிடுங்க.

kunukku
- Advertisement -

வீட்டில் கடையில் இருந்து வாங்கிய ஸ்னாக்ஸ் எதுவுமே இல்லை. ஆனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாயங்கால நேரத்தில் கொடுக்க ஏதாவது பலகாரம் வேண்டும் என்று யோசிக்கும்போது இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான் இது. ரேஷன் கடையில் இருந்து வாங்கிய துவரம்பருப்பு இருந்தால் கூட இதை சூப்பராக செய்துவிடலாம். கூரை கடை குனுக்கு செய்வது எப்படி. ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த ரெசிபியை செய்வதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. ஆனால் துவரம் பருப்பை மட்டும் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே நீங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இதை செய்ய முடியும். முதலில் 2 கப் அளவு துவரம் பருப்பை நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு தண்ணீரை எல்லாம் வடிகட்டி விட்டு துவரம் பருப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்க. தண்ணீரே இருக்கக் கூடாது. தண்ணீரை நன்றாக வடிக்கவும். பிறகு வர மிளகாய் 5, உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, வர மல்லி 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், இஞ்சி மிகச்சிறிய துண்டு தோல் சீவியது, போட்டு மிக்ஸி ஜாரை பல்ஸ் மூட்டில் ஓட்ட வேண்டும். நைசாக அரைபட்டால் குனுக்கு மொறுமொறுப்பாக வராது.

கொரகொரப்பாக கட்டியாக அரைத்த இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கோங்க. அதில் மிகப் பொடியாக நறுக்கி பெரிய வெங்காயம் 1, மிகப் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு, போட்டு நன்றாக உங்கள் கையால் பிசைந்து இதை எடுத்து அப்படியே உதிரி உதிரியாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் சூப்பரான கூரை கடை குனுக்கு மொறுமொறுப்பாக ரெடியாகிவிடும்.

- Advertisement -

மிதமான தீயில் இதை பொறித்து எடுத்து விடுங்கள். இந்த அருமையான ஸ்னாக்ஸை டீ கூட பரிமாறினால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: பன் தோசை எல்லாரும் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா மும்பை ஸ்டைலில் இந்த இன்ஸ்டன்ட் ஸ்டஃப்டு பன் தோசையை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இனி பன் தோசைன்னாலே இது தான் ஞாபகத்துக்கு வரும்.

பின்குறிப்பு: நிறைய பேர் இதை கடலை பருப்பிலும் செய்வார்கள். உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து மூன்று பருப்பிலும் செய்வார்கள். சில பேர் சுவைக்காக துருவிய தேங்காய் சேர்ப்பார்கள். சில பேர் பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து அரைத்து செய்வார்கள். இப்படி எல்லாம் விதவிதமாக ருசியாக கூட குனுக்கு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -