நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரே ஒரு முறை இந்த வேர் போட்டு குளித்தாலே போதும். வாழ்நாள் முழுவதும் எந்த கெட்ட சக்தியும் உங்களை நெருங்கவே முடியாது.

கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை சமாளிப்பது ஒரு கஷ்டம். கண்ணுக்கு தெரியாத எதிரிகளை சமாளிப்பது என்பது அதைவிட பெரிய கஷ்டம். இதோடு சேர்த்து கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளையும் சமாளித்து, நம்முடைய வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விட்டோம் என்றால் ஜெயித்தோம். என்ன செய்வது? கலிகாலம்! ஒருவர் நன்றாக வாழ்ந்து விட்டால் அது சிலருக்கு பொறுப்பதில்லை. உறவினர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, அக்கம்பக்கம் வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, சூழ்நிலை சரியில்லாதவர்களுக்கு, நல்ல நிலைமையில் வாழ்பவர்களை பார்க்கும்போது ஒரு விதமான பொறாமை குணம் உண்டாக தான் செய்யும்.

bathing

ஒரு சிலர் இதை சகஜமாக எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் பொறாமை கொண்ட குணம் கொண்ட ஒரு சிலர், இதை அப்படியே விட்டு விடுவது கிடையாது. நாம் நன்றாக வாழவில்லை என்றால், நம்முடன் இருப்பவர்களும் நன்றாக வாழக்கூடாது. ‘நமக்கு ஒரு கண் போனால், நம் எதிரே உள்ளவர்களுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளார்கள்’. அல்லவா? இப்படிப்பட்டவர்களையும் நாம் சந்திக்க தான் வேண்டி இருக்கின்றது.

அந்த வரிசையில் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு கண்திருஷ்டி வைத்தாலும் சரி, அல்லது உங்களது முன்னேற்றத்தை பார்த்து, உங்களது முன்னேற்றம் தடைப்பட செய்வினை பில்லி சூனியத்தை ஏவி விட்டாலும் சரி, அதிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள ஒரு வட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அது எப்படி?

நம்முடைய நன்மைக்காக சித்தர்கள் சில மூலிகைகளையும் அந்த மூலிகை வேரின் அருமை பெருமைகளையும் சொல்லி வைத்துதான் சென்றுள்ளார்கள். அதில் குறிப்பாக சொல்லப்போனால் குப்பைமேனி செடி, குப்பைமேனி வேர். இந்த செடி அதி அற்புதமான  மூலிகைச் செடியாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் குப்பைமேனி செடி வேர் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் இந்த செடியின் வேரை தாந்திரீகத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அற்புதமான இந்த குப்பைமேனி செடி வேரை எடுத்து, அந்த வேரை சிறிய உரலில் போட்டு நசுக்கி, கொஞ்சமாக தண்ணீரில் விட்டு அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு சாரு எடுத்து, நம்முடைய சாப்பாட்டோடு கலந்து சாப்பிட்டு விட்டாலே போதும். நம் உடலில் எந்த ஒரு கெட்ட சக்தியும் வந்து குடி கொள்ளாது.

இதேபோல் யாருக்காவது காத்து கருப்பு பிடித்து விட்டது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு தெரியாமலேயே, சாப்பாட்டில் மருந்து கலந்து வைத்து விட்டார்கள். வசியம் செய்து விட்டார்கள் என்ற பிரச்சினை இருந்தாலும் கூட சரி, அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்கள் சாப்பிடும் சாப்பாடில் இந்த குப்பைமேனி வேர் சாரை கலந்து கொடுத்து விட்டாலும், அவர்களை பிடித்த கெட்ட சக்தி அவர்களுடைய உடம்பில் இருந்து தானாக வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

kettasathi-1

அடுத்தபடியாக நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட தொடர்ந்து 48 நாட்கள் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த குப்பைமேனி வேரை போட்டு குளிக்க வேண்டும். குளிப்பதற்கு தயாராக இருக்கும் வெதுவெதுப்பான நீராக இருந்தாலும் சரி, குளிர்ந்த நீராக இருந்தாலும் சரி, அந்த தண்ணீரில் ஒரு சிறிய துண்டு வேர் போட்டு விட்டு பத்து நிமிடங்கள் கழித்து அந்த நீரில் தலை ஸ்னானம் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தாந்திரீக பரிகாரத்திற்கு குப்பைமேனி செடியை பிடுங்கும் போது, ‘மூலிகை நசி நசி, சாபம் நசி’ என்ற மந்திரத்தை சொல்லி அதன் பின்பு செடியிலிருந்து வேரை பிடுங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாங்கிய கடனை, இந்த நாளில் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். கடனை 1 ரூபாய் கூட மிச்சமில்லாமல், சீக்கிரம் அடைத்துவிடலாம். கடன் வாங்கும் சூழ்நிலையும் உங்களுக்கு மீண்டும் ஏற்படாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.