குருமா எப்படி செய்வது என்று பார்ப்போம்

kuruma

குருமா அனைத்து டிபன் வகைகள் குறிப்பாக சப்பாத்தி மற்றும் பரோட்டா போன்ற உணவிற்கு சிறந்த ஜோடி ஆகும். இந்த பதிவில் குருமா எப்படி எளிமையாக செய்வது என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

kuruma_1

குருமா செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி – 3
துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழது – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா – 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

குருமா செய்முறை:

முதலில் மிக்சியில் தக்காளி, துருவிய தேங்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவேண்டும் . பிறகு ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை போட வேண்டும்.

kuruma_2

- Advertisement -

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை அதில் சேர்க்கவும் கூடவே பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

kuruma_3

பிறகு அதில் மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக கிளறவும். பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தக்காளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும்.

குக்கர் 3 விசில் வரை விட்டு திறந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் குருமா தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
ஹலீம் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Kuruma recipe in Tamil. It is also called as Kuruma seimurai or Kuruma seivathu eppadi in Tamil or Kuruma ingredients in Tamil.