ஹலீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்

haleem
- Advertisement -

ஹலீம் என்பது ரமலான் மாதத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. ஹலீம் என்பது ஒரு முற்றிலும் ஹைதராபாத் உணவு வகையாகும். ஆட்டு இறைச்சியினை கொண்டு இது தயார் செய்ய படுகிறது. அது குறித்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

haleem_1

ஹலீம் செய்ய தேவையான பொருட்கள் :

- Advertisement -

மட்டன் – 300 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – சிறிதளவு
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
ஜாதிக்காய் – 1 பிஞ்சு
மூங் டால் – 3 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மைசூர் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
கோதுமை – 1/2 கப்
கோதுமை ரவை – 3/4 கப்
நெய் – சிறிதளவு
பாதாம் – சிறிதளவு

ஹலீம் செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு சேர்த்து அதனை வதக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

- Advertisement -

haleem_2

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது கலந்து கிளறவும். பிறகு அதில் சின்ன சின்ன துண்டுகளாக மட்டன் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

பிறகு அதனுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா, கொத்தமல்லி மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கிண்டவும். நன்றாக வெந்ததும் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

- Advertisement -

haleem_4

பிறகு மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து பருப்பு வகைகள் மற்றும் அரிசியினை அதனுடன் சேர்க்கவும். பிறகு அரைத்த கோதுமை மற்றும் கோதுமை ரவை அதில் சேர்த்து மீண்டும் அதனை நன்றாக வேக விடவும்.

நன்றாக வெந்ததும் கரண்டி கொண்டு மசிய வைத்து அதன் மீது நெய் ஊற்றி நறுக்கிய பாதாம்
போட்டு இறக்கினால் சுவையான ஹலீம் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

English Overview:
Here we have Haleem recipe in Tamil. It is also called as Haleem seimurai or Haleem seivathu eppadi in Tamil.

- Advertisement -