அட குஷ்பு இட்லி செய்வது இவ்வளவு ஈஸியா? இத்தனை நாளா இந்த டிப்ஸ் தெரியாம போச்சே!

kushboo-idly

நம்ம எல்லார் வீட்டிலேயும், சாதாரண இட்லி தான் செய்வோம். கல்யாண வீடுகளிலும், ஹோட்டல்களிலும் தான் குஷ்பு இட்லி என்று, குண்டு குண்டு இட்லிய பஞ்சு மாதிரி செய்வாங்க! அதே மாதிரி சூப்பரான இட்லியை நம்முடைய வீட்டிலும் செய்யலாம். வெளியிடங்களில் சாப்பிடும் போது அதில் கலந்திருக்கும் சோடா உப்பு, ஈஸ்ட் இப்படி உடலுக்கு கெடுதல் தரும் பொருட்களை கட்டாயம் கலந்து தான் செய்திருப்பார்கள். ஆனால் இந்த பொருட்களெல்லாம் சேர்க்காமல், ஆரோக்கியமாக அந்த குண்டு குண்டு குஷ்பு இட்லி நம்முடைய வீட்டில், சாஃப்டாக எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

idli-mavu

Step 1:
இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப், ஜவ்வரிசி – 1/2 கப். தேவைப்பட்டால் கொஞ்சமாக 1/4 ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெந்தயம் சேர்க்காமல் செய்தால் இட்லி முழு வெள்ளை நிறத்தில் வரும்.

அரிசியை எந்த கப்பில் அளந்து இருக்கிறீர்களோ, அதே கப்பில் உளுந்தையும் ஜவ்வரிசியையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி, உளுந்து, ஜவ்வரிசி மூன்று பொருட்களையும் தனித்தனியாக ஊற வைத்துவிட வேண்டும். (முழு வெள்ளை இட்லி அரிசியை வாங்கிக் கொள்ளுங்கள்.) அரிசியும் ஜவ்வரிசியையும் 7 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். உளுந்து 1 மணி நேரம் வரை ஊற வைத்தால் மட்டும் போதும்.

javarisi

Step 2:
அடுத்ததாக ஊறவைத்த பொருட்களை கிரைண்டரில் போட்டு மாவை ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை பொங்கப் பொங்க ஆட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஜவ்வரிசியையும், இட்லி அரிசியையும் ஒன்றாக போட்டு கொஞ்சம் மொழு மொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண இட்லிக்கு சிலபேர் சிறிய ரவை பதத்தில் அரைப்பார்கள் அல்லவா? குஷ்பு இட்லிக்கு மாவு நைஸாக தான் இருக்க வேண்டும். மாவையும் கொஞ்சம் கெட்டிப் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 3:
அரைத்த உளுந்தையும், அரிசி ஜவ்வரிசி சேர்த்த மாவையும் ஒன்றாக வழித்து, தேவையான அளவு உப்பு போட்டு, உங்கள் கைகளாலேயே கரைத்து வைத்துவிடுங்கள். மாவு 8 மணி நேரம் வரை நன்றாகப் புளிகட்டும். அதன் பின்பு, மாவை லேசாக கலக்கி விட்டு, பின்பு எப்போதும்போல் இட்லி ஊற்றி வைத்து பாருங்கள். இட்லி சாஃப்டாக குண்டு குண்டாக அழகாக வந்திருக்கும். இட்லியை ஊற்றும் போது, புளித்துப் பொங்கிய நுறையோடு, பொங்க பொங்க ஊற்ற வேண்டும். இடியை வேக வைத்து எடுக்கும் போது, உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இது நம்ம வீட்டில் செய்த இட்லி தானா என்று.

Idli

நினைக்கும் போதே, பஞ்சு போல சுட சுட இட்லியை, சாம்பார் தொட்டு சாப்பிட வேண்டும் போல இருக்கிறதா? உடனே உங்க வீட்லயும் இன்னைக்கே அரிசியை ஊற வச்சு மாவாட்டி, நாளைக்கு இட்லி சுட்டு சாப்பிடுங்க! மாவை பக்குவமாக அரைத்து, செய்தால் கட்டாயம் இட்லி பக்குவமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அளவுகளை ஏற்றி இறக்கி போட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே
கல்யாண வீட்டு ‘பிரிஞ்சி சாதம்’ எப்படி தான் சுவையாக செய்கிறார்கள்? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.