நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் வேண்டி தவம் இருப்பவர்களுக்கு 3 முத்தான பரிகாரங்கள்! இந்த பரிகாரத்தை செய்தால் ஒரே வருடத்தில் குழந்தை பாக்கியத்தை பெறுவது நிச்சயம்.

murugar

குழந்தை வரம் வேண்டி பல நாட்களாக தவம் இருக்கும் தம்பதியர்களுக்கு ஜாதகரீதியாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்வதற்கு ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே அனுபவிப்பதற்கு நிறைய சொத்து சுகம் இருக்கும், ஆனால் கொஞ்சி வளர்ப்பதற்கு, அவர்களுக்கு வாரிசு என்று சொல்லிக்கொள்ள ஒரு குழந்தை இருக்காது. மிகப்பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் சோகம் தான் இந்த புத்திர சோகம். எவ்வளவோ பரிகாரங்களை செய்தும் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இனி வேண்டாம்.

thiruchendur-murugan

குழந்தை வரத்திற்காக பல வருடங்களாக காத்திருந்தும், அந்த குழந்தை பாக்கியம் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த மூன்று திருத்தலங்களுக்கு சென்று வரவேண்டும். அந்த மூன்று திருத்தலங்கள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

முதலாவதாக நீங்கள் செல்ல வேண்டிய கோவில் ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’. எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய சக்தி இந்த முருகப்பெருமானுக்கு உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து, மனம் உருகி குழந்தை வரத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

shiva-lingam

இரண்டாவதாக, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில், குலசேகரப்பட்டினத்தில் அமைந்திருக்கும் ‘குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு’ சென்று அம்பாளை மனமுருகி தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக திருச்செந்தூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் உவரி என்ற கிராமத்தில், சுயம்புவாக தோன்றி இருக்கும் ‘உவரி லிங்க கோவிலில்’ இருக்கும் சுயம்பு லிங்கத்தையும் நாம் வழிபட வேண்டும். வேண்டிய வரங்களை உடனடியாக அள்ளிக் கொடுக்கக் கூடிய சக்தி இந்த சுயம்பு லிங்கத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

amman2

இவ்வாறாக ஒரே நாளில் இந்த மூன்று திருத்தலங்களையும் தரிசனம் செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கிரக ரிதியான தோஷங்கள் நிவர்த்தி அடையும். முதலில் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட வேண்டும், இரண்டாவதாககுலசை மாரியம்மன், மூன்றாவதாக உவரி சுயம்புளிங்கம் இந்த வரிசையில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

baby-cry

ஒரே நாளில் இந்த மூன்று திருத்தலங்களுக்கும் சென்று வந்தால், புத்திர பாக்கியத்தை தடை படுத்தக்கூடிய தடைகள் நிச்சயமாக விலகும். இதோடு சேர்த்து உங்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால், அந்த சிகிச்சையோடு சேர்ந்து ஆன்மீக ரீதியான இந்த 3 முத்தான கோவில்களுக்கும் சென்று வந்தால், உங்களுடைய சிகிச்சை பலனளித்து உடனே புத்திரபாக்கியம் பெறும் வரத்தையும் உங்களால் நிச்சயம் பெற முடியும்.

baby-krishna

அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய வீட்டில் குழந்தை கிருஷ்ணர் படத்தை ஆங்காங்கே மாட்டி வையுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போது அந்த கிருஷ்ணரின் குழந்தை படத்தை பார்த்துக் கொண்டே இருக்கும்போது, குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்கும் என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான். பூஜை அறையில் கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபாடு செய்தாலும், குழந்தை ரூபத்தில் இருக்கும் கிருஷ்ணருடைய படத்தை வரவேற்பறையில் மாட்டி வைத்து அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால், உங்களுடைய மடியிலும் கூடிய விரைவில் ஒரு குழந்தை தவழ்ந்து விளையாடும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.