குழந்தை வரம் தரும் குலதெய்வ தீபம்

kuladheiva deepam
- Advertisement -

திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சந்தோஷமாக இருந்தாலும், அதற்குப் பிறகு குழந்தை பாக்கியம் என்பது எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அது அதற்குரிய நேரத்தில் நடந்தால் தானே சிறப்பு. அதைப்போல தான் குழந்தை பிறப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடந்து விட வேண்டும். இல்லையேல் சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை வரும்.

எந்தவித நல்ல காரியத்திற்கும் செல்ல முடியாத ஒரு சங்கடம் உண்டாகும். இது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மட்டுமே உணரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களின் குலதெய்வத்தை நினைத்து எப்படி தீபம் ஏற்றினால் குழந்தை வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வத்தை தான் குலதெய்வம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட குலதெய்வத்திடம் தான் நம்முடைய குலம் வளர வேண்டும் என்று நாம் வேண்ட வேண்டும். முதலில் குலதெய்வத்திடம் நாம் பிரார்த்தனை செய்த பிறகுதான் வேறு எந்த தெய்வத்தையும் வேண்ட வேண்டும் என்பது பொதுவான விதியாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது குழந்தை பாக்கியத்திற்கு மட்டும் குலதெய்வத்தை வேண்டாமல் இருக்கலாமா? எளிமையான முறையில் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பார்ப்போம்.

இந்த தீப வழிபாட்டை நாம் ஆரம்பிப்பதற்கு வளர்பிறை சுப முகூர்த்த நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்கு நம்முடைய வீட்டு பூஜை அறையில் நம் வீட்டு குலதெய்வத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். அன்று தாம்பாளத்திற்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலை கிழிந்து இருக்கக்கூடாது.

- Advertisement -

பிறகு அந்த வெற்றிலைக்கு மேல் சுத்தமான மஞ்சளை வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான மஞ்சள் இல்லாத பட்சத்தில் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். அந்த மஞ்சளுக்கு மேல் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போட்டு அந்த அகல் விளக்கை சுற்றி மலர்களால் அலங்கரித்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு உங்களுடைய குல தெய்வத்தின் பெயரை 54 முறை உச்சரிக்க வேண்டும். முடிந்தவர்கள் 108 முறை கூட உச்சரிக்கலாம்.

இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு உங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற வேண்டுதலை மனதார குலதெய்வத்திடம் கூற வேண்டும். இப்படி தொடர்ந்து 12, 24, 48 என்ற நாட்கள் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தினமும் வெற்றிலை, மஞ்சள், திரி போன்றவற்றை மாற்ற வேண்டும். இதில் நாம் வைத்திருக்கக்கூடிய வெற்றிலையின் காம்பானது வடக்கு பார்த்தவாரும் நுனி தெற்கு பார்த்தவாரும் இருக்க வேண்டும்.

- Advertisement -

குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த தீபம் எரிய வேண்டும். மறுநாள் புதிதாக விளக்கை சுத்தம் செய்துவிட்டு புதிதாக ஏற்ற வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே தங்கம் சேர வெள்ளிக்கிழமை பரிகாரம்

குழந்தை பாக்கியத்திற்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கக்கூடிய தம்பதிகள் அதோடு சேர்த்து குலதெய்வத்தையும் இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -