உங்கள் குழந்தைக்கு முதல் முதலில் நகை போட போகிறீர்களா? மறக்காமல் இதை செய்த பின் போடுங்கள். குழந்தைக்கு ஐஸ்வர்யங்கள் மேலும் மேலும் பெருகும்.

- Advertisement -

நம் தமிழர் கலாச்சாரத்தில் நகை என்பதை ஒரு அணிகலன் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், பெரும்பாலும் அதை ஐஸ்வரியம் சார்ந்த பொருளாக தான் நாம் இன்று வரை தங்கத்தை போற்றி வருகிறோம். இதனாலேயே தான் தங்கம் வாங்கும் போதும், செய்ய கொடுக்கும் போதும், தங்கம் சார்ந்து எதை செய்தாலும் அதற்காக குறிப்பிட்ட நேரம் பார்த்து ஒவ்வொன்றையும் அக்கறையோடு பார்த்து பார்த்து செய்து வருகிறோம். தங்கத்தை ஐஸ்வர்யமாக எப்படி மாற்றுவது என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்குவதை கூட ஒரு விசேஷமாகவே செய்வோம். சிலர் அதை வாங்குவதற்கு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்கள் சேர்ந்து போய் வாங்குவது, இன்னும் சிலர் பொன் உருக்குவது, இதை ஒரு விசேஷமாக அனைவரையும் அழைத்தே செய்யக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வாகவே செய்வார்கள். அதே போல் தான் குழந்தைகளுக்கு நகை போடும் போதும் சில விஷயங்களை பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு குழந்தைக்கு முதல் முதலில் நாம் போடும் நகையால் அந்த குழந்தை மேலும் மேலும் நகை சேரக்கூடிய ஐஸ்வரியம் கிடைக்கவும், மகா லட்சுமி தாயாரின் அருள் கிடைக்கவும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டு போட்டால் போதும். அந்தக் குழந்தைக்கு என்றுமே லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். லக்ஷ்மி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைத்தாலே தங்கத்திற்கு குறைவேது, சரி வாருங்கள் அந்த பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

குழந்தைக்கு வாங்கி வரும் நகைகளை வீட்டில் வந்தவுடன் ஒரு சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அந்த தண்ணீரில் நகையை போட்டு எடுத்த பிறகு அதை ஒரு சுத்தமான துணியில் துடைத்து எடுத்து விடுங்கள். இந்த முறை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும். இப்படி செய்வதினால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும்.

- Advertisement -

அடுத்தது ஏதாவது ஒரு துணி எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அது பயன்படுத்திய துணியாக இருக்கக் கூடாது. புதிய துணியாக இருக்க வேண்டும் அது காட்டனாக இருக்கலாம், பட்டாக இருக்கலாம் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்ல வாசனை மலர்களை வைத்துக் கொள்ளுங்கள் விசேஷமான வாசனை உள்ள மலர்களாக கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லை எனில் வாசனை தரக்கூடிய மலர் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை அந்த துணி முழுவதும் பரப்பி விடுங்கள்.

நீங்கள் குழந்தைக்கு வாங்கி வந்த நகையை அந்த மலர் மீது வைத்து ஒரு முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அது அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு அந்த நகை முடிச்சுக்கு கற்பூர தீபாராதனை காட்டி அந்த நகையை எடுத்து குழந்தைக்கு போட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்படி வாசனை மலர்களில் நகையை வைத்து எடுக்கும் போது அந்த பொருள் லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருளாக மாறிவிடும். ஏனென்றால் வாசனை மலர்களிலும் வாசம் செய்பவள் மகாலட்சுமி தாயார், தங்கமும் அவரின் அம்சமே, இரண்டும் ஒன்றாக சேரும்போது தங்கமானது ஐஸ்வர்யமாக மாறி விடும். இதன் பிறகு குழந்தைக்கு நகையை போட்டு விடுங்கள். நகையை கழட்டி வைக்கும் போது திரும்பவும் அந்த பையிலே வைத்தால் மிகவும் சிறப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நகைப்பெட்டியில் கூட வைத்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கசப்பான கஷ்டங்கள் இல்லாமல், இனிப்பான இன்பமான வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழ, நாளை விநாயகருக்கு இந்த 1 பொருளை நிவேதனமாக வையுங்கள்.

ஒரு குழந்தைக்கு முதல் முதலில் அணிவிக்கும் நகையானது எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நகையால் குழந்தை மேலும் மேலும் நல்ல செல்வ செழிப்போடும், ஐஸ்வர்யத்தோடும், லஷ்மி தாயாரின் ஆசீர்வதித்தோடும் இருக்க இந்த முறையை கடைப்பிடித்து பலனடையுங்கள்.

- Advertisement -