குழப்பமான மனநிலையில் முடிவு எடுக்க ரூபாய் நோட்டை புத்தகத்தில் இப்படி வையுங்கள்!

book-murugan

எல்லோருடைய மனமும் எல்லா நேரத்திலும் தெளிவாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பிப் போய் நிற்போம். அந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் சரியா? தவறா? என்பது கூட நமக்கு தெரிவதில்லை. எவ்வளவு யோசித்தாலும் அதற்கான விடையும் கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் முடிவெடுக்கக் கூடிய தைரியம் பெற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sad

நீங்கள் ஒரு நபரை பற்றிய தவறான கருத்துகளை கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீ அப்படி செய்தாயா? என அவர்களிடம் கேட்க ஆர்வத்துடன் தான் இருப்பீர்கள் ஆனால் அதை கேட்க தயக்கம் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஒன்று உங்களுடைய மனதில் தோன்றும். ஆனால் அந்த முடிவு எடுக்கும் பொழுது அது சரியா? தவறா? என்கிற குழப்பம் நீடிக்கும்! இதுபோன்ற எல்லா விதமான குழப்பமான சூழ்நிலையில் முடிவு எடுக்கக்கூடிய ஆற்றலை நாம் பெறுவதற்கு நல்ல புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்கும்.

உங்களிடம் இருக்கும் தெய்வீக புத்தகங்கள் அல்லது கருத்துக்கள் பொதிந்த நல்ல புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்து ஒரு பக்கத்தில் சொருகி வையுங்கள். இப்படி அடிக்கடி செய்து கொண்டே இருங்கள்.

books1

புத்தகங்களில் ஆங்காங்கே பல பக்கங்களில் நீங்கள் சொருகி வைத்தால் ரூபாய் நோட்டுகள் இருக்கும். இது போன்ற குழப்பமான மனநிலையில் இருப்பவர்கள் அந்த புத்தகத்தை பூஜை அறையில் கொண்டு போய் வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்னர் புத்தகத்தில் இருக்கும் ரூபாய் நோட்டு உள்ள பக்கத்தை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த பக்கத்தை மட்டும் ஒரு முறை வாசியுங்கள். அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப நீங்கள் முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு அந்த புத்தகம் தெய்வீக அல்லது நமக்கு அறிவுரை கூறக்கூடிய வகையில் நல்ல புத்தகங்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களால் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இப்படி செய்யும் பொழுது அந்த புத்தகத்தின் வாயிலாக உங்களுக்கு தேவையான கருத்துக்கள் கட்டாயம் கிடைத்துவிடும். இதை இறைவனின் முன்னிலையில் நீங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு இறைவன் அருள் புரிவதாக நீங்கள் மனதில் எண்ணிக் கொள்வீர்கள். எப்பொழுதும் மனதில் நாம் எண்ணும் சில விஷயங்கள் தான் நிஜத்திலும் பிரதிபலிக்கும்.

money

உங்களுடைய மனதை தெளிவுபடுத்தும் அந்த கருத்துக்களுக்கு ஏற்ப நீங்கள் முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆன்மிக பக்கங்களில் நல்லது கெட்டது இரண்டுமே உங்களுக்கு எடுத்து கூறப்பட்டிருக்கும். ஒரு விஷயத்தை செய்யலாமா? செய்யக்கூடாதா? ஒரு முடிவை எடுக்கலாமா? எடுக்கக் கூடாதா? ஒரு கேள்வியை கேட்கலாமா? கேட்க கூடாதா? என்பது போன்ற சந்தேகங்களுக்கு இந்த பரிகாரம் சிறந்த வழிகாட்டியாக உங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

book

அடுத்த முறை இதே போல அடுத்த ரூபாய் நோட்டில் இருக்கும் பக்கத்தைத் திருப்பினால் அதிலும் உங்களுக்கு அடுத்த கருத்துகள் கிடைக்கும். பொதுவாகவே புத்தகத்தை வாசிக்கும் பொழுது நம்மை அறியாமல் நம் மனம் நல்ல அதிர்வலைகளை கொண்டிருப்பதை பலமுறை நீங்களும் உணர்ந்து இருக்கலாம். எனவே இதனை முயற்சி செய்து பார்த்துவிட்டு பயனடையுங்கள்.