10 ரூபாய் முதலீடு போட்டாலும் கூட, 100 ரூபாய் லாபத்தை சுலபமாக எடுத்து விட முடியும். இந்த 1 பொருளை மட்டும், நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்துப் பாருங்கள்!

money

மனிதர்கள் வாழ்வதற்கு செல்வம் எனப்படும் பணம் தேவை. அதை ஈட்ட பெரும்பாலானோருக்கு இருப்பது இரண்டு வழிகள் தான் ஒன்று பிறரிடம் சம்பளத்திற்கு வேளைக்கு செல்வது அல்லது தங்களுக்கு தெரிந்த தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டு பொருளீட்டுவது. இதில் சிலருக்கு பிறரிடம் வேலைக்கு செல்வதை விட தனக்கு தானே முதலாளியாக இருக்க விரும்பி சொந்த தொழில், வியாபாரங்களை செய்கின்றனர். எத்தகைய தொழில், வியாபாரங்கள் செய்பவர்களும் தங்களின் தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கவும், வியாபார விடயங்கள் அனைத்திலும் மிகச்சிறப்பான வெற்றிகளை பெறவுமே விரும்புகின்றனர். அந்த வகையில் நீங்கள் செய்யும் தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்து, அதிக லாபங்களை பெறவும், தொழில், வியாபாரம் மேன்மேலும் விரிவடையவும் கீழ்கண்ட ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்வதால் நற்பலன்களை பெறலாம்.

Thozhil

குறுகிய காலத்தில் அதிகளவு செல்வம் ஈட்டவும், தங்களின் திறமையை பயன்படுத்தி அதிக லாபம் சம்பாதிக்கவும் உதவுவது ஒருவர் செய்கின்ற சொந்த தொழில் மற்றும் வியாபாரங்கள் தான். சில சமயம் தொழில் வியாபாரங்களில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும்போது அவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் மனதளவில் மிகவும் நொந்து போய் விடுவார்கள். தங்கள் தொழில், வியாபாரத்தில் நஷ்டங்கள், திவாலாகும் நிலை போன்றவை ஏற்பட கூடாது என நினைப்பவர்கள் கீழ்கண்ட பரிகாரத்தை செய்வது அவசியமாகும்

மருத்துவ குணங்கள் மற்றும் பல தெய்வீக ஆற்றல்களை தன்னுள் அடக்கிய ஒரு அற்புத மரமாக “ஆலமரம்” திகழ்கிறது. நம் நாட்டு பாரம்பரிய மத சடங்குகளில் ஆலமரத்திற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டிற்கு அருகில் ஏதேனும் ஒரு பெரிய அளவிலான ஆலமரம் இருக்கும் பட்சத்தில், அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியிலிருக்கும் வேரிலிருந்து ஒரு சிறு துண்டை வெட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

aala-maram

மிக உயர்தரமான அசலான பட்டு நூல்கண்டு ஒன்றை வாங்கி வந்து, அந்த நூல் முழுவதும் செஞ்சந்தன பசையை கொண்டு நன்கு தடவி வைத்து கொள்ள வேண்டும். இதன் பிறகு அந்த ஆலமர வேர் துண்டு முழுவதும் மூடும் அளவிற்கு, செஞ்சந்தன பசை தடவப்பட்ட பட்டுநூலினை கொண்டு முழுவதுமாக நன்கு சுற்றி கட்டி விட வேண்டும். இப்படி முழுவதும் பட்டு நூலால் சுற்றி கட்டப்பட்டிருக்கும் ஆலமர வேரினை எடுத்து வந்து, உங்களுக்கு சொந்தமான தொழில், வியாபாரம் செய்யும் கூடங்களின் வாயிற்படி மேல தொங்கும் கட்டி வைத்து விட வேண்டும்.

மேற்கூறிய பரிகாரத்தை மாதத்தின் எந்த ஒரு நாளிலும் செய்யலாம் என்றாலும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்வது சாலச்சிறந்தது. பட்டு நூலினால் சுற்றி கட்டப்பட்டிருக்கும் ஆலமரத்து உங்கள் தொழில் செய்யும் கூடங்களில் இருக்கின்ற பொழுது, அது சுற்றிலும் நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தி, மிக நீண்டகாலமாக உங்களுக்கு தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பொருளாதார ரீதியான நஷ்டங்களை தடுத்து, புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்து, நீங்கள் அதிக லாபங்களை பெற வழிவகுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக அவ்வப்போது ஏற்பட்ட வீண் பண விரயங்களையும் தடுத்து நிறுத்தும்.

money

மேற்சொன்ன முறையில் தொழில், வியாபார கூடங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கின்ற ஆலமர வேர் துண்டிற்கு தனியாக தினந்தோறும் பூஜைகள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதிகம் வெளியில் சொல்லப்படாத இந்தப் ரகசிய பரிகார முறையை பின்பற்றி தங்கள் தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை தடுத்து மிகச் சிறந்த நன்மைகளை பெற்றுள்ளதாக அனுபவ ரீதியாக பலன் பெற்றவர்களால் கூறப்படுகின்றது.