- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalலாபம் பெருக கிருத்திகை வழிபாடு

லாபம் பெருக கிருத்திகை வழிபாடு

- Advertisement -

நிரந்தர வேலையில் அமர்ந்து, வருமானத்தை பெருக்கவும், நிரந்தரமாக ஒரு வியாபாரம் செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும், நாம் செய்ய வேண்டிய வழிபாடு முருகர் வழிபாடு. முருகனது திருப்பாதங்களை இறுக்கப்பற்றிக் கொண்டால், நம்முடைய கஷ்டங்கள் நீங்கும். செல்வ வளம் உயரும் என்பது நம்பிக்கை.

உங்களுடைய பணம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்த்து வந்திருக்கும் கிருத்திகை தினத்தில் உங்களுடைய வீட்டிலேயே இந்த தீபத்தை ஏற்றி வையுங்கள். இந்த தீபத்தின் முன்பு நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டு எவ்வளவு செல்வ வளத்தை கேட்டாலும் அந்த முருகப்பெருமான் உங்களுக்கு வாரி வாரி கொடுத்து விடுவார்.

- Advertisement -

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அது மட்டும் அல்லாமல் நாளைய தினம் விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திரியும் இருக்கிறது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.

வளர்பிறை கிருத்திகை விளக்கு பரிகாரம்

முருகனுக்கு உகந்த பொருள் என்றால் அது திருநீறு. கொஞ்சம் பசுஞ்சான திருநீராக வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் திரு உருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். பிறகு ஒரு தாம்பூல தட்டில் கொஞ்சமாக விபூதி பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பு.

- Advertisement -

நெய் ஊற்றி, தீபம் ஏற்ற முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். தவறு எதுவும் கிடையாது. முருகனின் முன்பாக அமர்ந்து இந்த தீபத்தை பார்த்து, உங்களுடைய கோரிக்கையை முருகப்பெருமானிடம் சொல்லி “ஓம் சண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

முருகனுக்கு உங்களால் முடிந்த இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியம் வைத்தாலும் போதும். இவ்வளவுதான் வழிபாடு. இந்த வழிபாட்டை செய்து முடித்து விட்டாலும், அந்த தீபம் உங்களுடைய வீட்டில் ஒரு மணி நேரம் எரிய வேண்டும். இந்த ஒரு மணி நேரம், நாளைய தினம் எந்த நேரத்தில் வழிபாடு மேற்கொள்வது. செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த வழிபாட்டை செய்வது அதி அற்புதம் வாய்ந்த பலனை கொடுக்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை காலை 6 டு 7, மதியம் 1 டு 2 இரவு 8 டு 9 இந்த மூன்று மணி நேரங்களும் செவ்வாய் ஹோரை வரக்கூடிய நேரங்கள். இதில் ஏதாவது ஒரு மணி நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதிசக்தி வாய்ந்த பலன் தேவை என்றால் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபம் உங்களுடைய வீட்டில் ஏற்றினால் ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: சகல காரியங்களிலும் வெற்றி உண்டாக

தீபம் எரிந்து முடிந்தவுடன் ஒரு நாள் மட்டும் விபூதி பூஜை அறையிலேயே இருக்கட்டும். அடுத்த நாள் இந்த விபூதியை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சண்முகாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு இந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு உங்களுடைய வேலையில் செய்யுங்கள். நீங்கள் துவங்கும் வேலை, செய்யும் வேலை அனைத்தும் லாபம் லாபம் லாபம்.

சற்று முன்