- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalலாபம் பெருக வியாபாரிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

லாபம் பெருக வியாபாரிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

இன்று வியாபாரம் செய்பவர்களில் முக்கால் வாசி பேர், கடனாளியாக தான் இருக்கிறார்கள். வியாபாரம் செய்ய கடனுக்கு பொருட்களை வாங்கிவிட்டு, அந்த கடனை திருப்பி தர முடியாமல் தவிக்கும் முதலாளிகள் தான் அதிகம். கல்லாவில் தைரியமாக உட்காரக் கூட முடியவில்லை. கடன் கொடுத்தவன் எங்கே வந்து விடுவானோ என்ற பயம். இந்த பிரச்சனை எல்லாம் வரக்கூடாது.

ஒழுங்காக வியாபாரம் செய்ய வேண்டும், சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் வரை, உங்களுடைய நிதி நிலைமையில், நீங்கள் எளிதில் வீழ்ச்சி அடையக் கூடாது என்றால், எளிதில் கடனில் போய் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றால் என்ன செய்வது. கடவுளை கும்பிடனும். நம்பிக்கையோடு இறை வழிபாடு செய்து, கூடவே சேர்த்து நேர்மையாக உழைக்கணும். கடவுளின் ஆசிர்வாதமும், நேர்மையும், கண்ணியமும் உங்களிடத்தில் இருந்தால் வியாபாரத்தில் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது.

- Advertisement -

சரி வியாபாரிகள், கடன் தொல்லையில் இருந்து விடுபட என்ன வழிபாடு செய்வது. தினமும் கடைக்கு சென்ற உடன் முதல் வேலையாக இரண்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். நல்லெண்ணெய் விளக்கமாக இருக்க வேண்டும். இரண்டு விளக்குகளும் வடக்கு திசையை நோக்கி எறிய வேண்டும். வடக்கு திசை குபேரது திசை. பிறகு அந்த தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து இந்த மந்திரத்தை முதலில் 17 முறை படித்து விடுங்கள். சின்ன மந்திரம் தான் பயப்பட வேண்டாம்.

குபேர நிதி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே தனதேவாய தீமஹி
தந்நோ குபேர நிதி ப்ரசோதயாத்

- Advertisement -

இந்த மந்திரத்தை படித்து முடித்தவுடன் உங்களுக்கு நேரம் இருந்தால் தினமும் இந்த பாடலையும் படிக்க வேண்டும். திருஞானசம்பந்தர் அவர்களால் அருளப்பட்ட தேவாரம் பாடல் வரிகள் இது.

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

- Advertisement -

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு
மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

முடிந்தால் இந்த பாடலை படியுங்கள் இல்லையென்றால் முதலில் சொல்லப்பட்ட குபேர நிதி மந்திரத்தை மட்டும் சொல்லிவிட்டு, youtube இல் இந்த பாடலை ஒலிக்க விட்டு விடுங்கள். இந்த பாடலை காதால் கேட்டால் கூட போதும். படிப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் இந்த பாடலை வியாபாரம் செய்யும் இடத்தில் ஒலிக்க விட்டாலும் பணவரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும்.

மிக மிக எளிமையான பரிகாரம் இது. நீங்க காய்கறி கடை வச்சிருக்கீங்க, டெய்லர் கடை வச்சிருக்கீங்க, சின்ன பெட்டி கடை வச்சிருக்கீங்க, இட்லி கடை பணியார கடை, எதுக்காக இருந்தாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெரிய ஃபேக்டரி, அலுவலகம் இருக்கிறது என்றாலும் சாமி ரூம் கட்டாயம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் அருகம்புல் விநாயகர் மந்திரம்

ஒரு அலமாரியில் சுவாமி புகைப்படம் மாட்டி விளக்கு ஏற்றுவீர்கள் அல்லவா. அந்த இடத்தில் முதலாளிகள், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நிச்சயமாக உங்களுடைய வியாபாரத்தில் நிதிநிலைமை மேல் உயர்வதை உணருவீர்கள். இருக்கும் பணப்பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். ஒரு நாள் இரண்டு நாள் பரிகாரத்தை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தினமும் நம்பிக்கையோடு இதை செய்து வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்