ஜாதக லக்கினத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

astrology

ஜோதிடத்தை பொறுத்த வரை இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் கணிக்க முடியும். அந்த ஜாதகத்தில் 12 ராசிக்கட்டங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு விடயத்தை கூறுபவை. அதில் முதலாவதாக வரும் ராசி “லக்னம்” எனப்படும். லக்னத்தில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எத்தகைய பலன்கள் என்பதை பார்ப்போம்.

astrology

முதல் வீடு அல்லது லக்னம் ஒரு ஜாதகரின் உடல் தோற்றம், இறை பக்தி ஆயுள் போன்றவற்றை கூறுவதாகும். இந்த லக்னம் அல்லது முதல் வீட்டில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.

சூரியன்

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலேயே சூரியன் இருந்தால் நல்ல வலுவான உடலை பெற்றிருப்பார். தைரியமான குணமிருக்கும். நடுத்தரமான ஆயுளை உடையவராவார். தெய்வ பக்தி கொண்டவராக இருப்பார்.

சந்திரன்

- Advertisement -

சந்திரன் ஒரு நபரின் முதல் வீடு அல்லது லக்னத்திலேயே இருந்தால் சற்று மெலிந்த தேகத்தை கொண்டிருப்பர். சிறந்த சிந்தனை திறனும், இரக்க குணமும் அதிகம் கொண்டவராக இருப்பார். சற்று நீண்ட ஆயுளை கொண்டவராக இருப்பார்.

astrology

 

செவ்வாய்

செவ்வாய் லக்னம் எனும் முதல் வீட்டிலேயே இருந்தால் அந்த ஜாதகர் நல்ல பலமான தேக கட்டு கொண்டவராக இருப்பார். வீரமிக்க குணம் இருக்கும். இறை பக்தி அதிகம் இருக்கும். மத்திம ஆயுளை கொண்டவர் ஆவார்.

astrology

புதன்

புதன் முதல் வீட்டில் இருக்க பிறந்த ஜாதகர் நடுத்தரமான உயரம் கொண்டவராக இருப்பார். எதையும் பார்வையிலேயே எடைபோடும் மனம் கொண்டவர். ஆன்மீக விடயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல உண்மைகளை வெளிகொணர்வார். குறைந்த அல்லது மத்திமமான ஆயுள் இருக்கும்.

Budhan mantra Tamil

வியாழன்

வியாழன் அல்லது குரு ஜாதகத்தில் லக்னத்தில் இருப்பவர்கள் நல்ல உயரமும், பலம் வாய்ந்த தேகமும் கொண்டிருப்பர். இவர்கள் சற்று வெளிறிய தோள் நிறம் கொண்டவர்களாக இருப்பர். ஆன்மீகத்தில் ஞானி போன்ற நிலையை அடையக்கூடியவர்கள். நீண்ட ஆயுள் இருக்கும்.

Guru astrology

சுக்கிரன்

சுக்கிரன் முதல் வீட்டில் இருக்க பிறந்தவர்கள் சற்று குள்ளமான உருவத்தை கொண்டவர்களாக இருப்பர். ஒரு சிலர் முதலில் நாத்திகர்களாகவும் பிறகு ஆத்திகர்களாகவும் மாறுவார்கள். மத்திமமான ஆயுளை உடையவர்கள் ஆவர்.

Sukran peyarchi astrology

சனி

ஆயுள்காரகனான சனி ஒருவரின் லக்னத்திலேயே இருந்தால் அவர் மிகவும் நீண்ட ஆயுளை பெற வாய்ப்புகள் அதிகம். நடுத்தரமான உயரமும் தேக வலுவும் கொண்டவர்கள். ஒரு சிலர் இறை பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் மற்ற சிலர் நாத்திகர்களாக இருக்க கூடும்.

Sani bagavaan

ராகு

ராகு முதல் வீட்டில் இருந்தால் சற்று இளைத்த தேகத்தை கொண்டிருப்பார்கள். குறைந்த அல்லது மத்திமமான ஆயுள் இருக்கும். தெய்வ பக்தி கொண்டிருப்பார்கள்.

Rahu Kethu

கேது

கேது முதல் வீட்டில் இருந்தால் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீக விடயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். நீண்ட ஆயுளை கொண்டவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.