லட்சுமி 108 போற்றி மற்றும் லட்சுமி 108 பெயர்கள்

lakshmi-1
- Advertisement -

வாரத்தில் பல கிழமைகள் இருக்கின்றன அதில் வெள்ளிக்கிழமை என்பது இறைவழிபாட்டிற்கென்றே இருக்கும் ஒரு கிழமையாக அமைந்து விட்டது. நவகிரகங்களில் “சுக்கிர” பகவானின் ஆதிக்கம் மிக்க இந்த வெள்ளியன்று, செல்வங்களுக்கு அதிபதியாகிய நாராயணனின் பத்தினியாகிய ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது சாலச் சிறந்தது ஆகும். அந்த திருமாலுக்கு பல பெயர்கள் உண்டு. அது போல செல்வமகளான லட்சுமிக்கும் பல பெயர்கள் உண்டு. அந்த பெயர்களில் 108 போற்றி துதிகளை கொண்டது இது.

mahalakshmi

லட்சுமி 108 போற்றி, லட்சுமி 108 பெயர்கள்

ஓம் அன்புலட்சுமி போற்றி
ஓம் அன்னலட்சுமி போற்றி
ஓம் அமிர்தலட்சுமி போற்றி
ஓம் அம்சலட்சுமி போற்றி
ஓம் அருள்லட்சுமி போற்றி
ஓம் அஷ்டலட்சுமி போற்றி
ஓம் அழகுலட்சுமி போற்றி
ஓம் ஆனந்தலட்சுமி போற்றி
ஓம் ஆகமலட்சுமி போற்றி
ஓம் ஆதிலட்சுமி போற்றி

- Advertisement -

ஓம் ஆத்மலட்சுமி போற்றி
ஓம் ஆளும்லட்சுமி போற்றி
ஓம் இஷ்டலட்சுமி போற்றி
ஓம் இதயலட்சுமி போற்றி
ஓம் இன்பலட்சுமி போற்றி
ஓம் ஈகைலட்சுமி போற்றி
ஓம் உலகலட்சுமி போற்றி
ஓம் உத்தமலட்சுமி போற்றி
ஓம் எளியலட்சுமி போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி

ஓம் ஒளிலட்சுமி போற்றி
ஓம் ஓங்காராலட்சுமி போற்றி
ஓம் கருணைலட்சுமி போற்றி
ஓம் கனகலட்சுமி போற்றி
ஓம் கஜலட்சுமி போற்றி
ஓம் கானலட்சுமி போற்றி
ஓம் கிரகலட்சுமி போற்றி
ஓம் குணலட்சுமி போற்றி
ஓம் குங்குமலட்சுமி போற்றி
ஓம் குடும்பலட்சுமி போற்றி

- Advertisement -

santhana lakshmi

ஓம் குளிர்லட்சுமி போற்றி
ஓம் கம்பீரலட்சுமி போற்றி
ஓம் கேசவலட்சுமி போற்றி
ஓம் கோவில் லட்சுமி போற்றி
ஓம் கோவிந்தலட்சுமி போற்றி
ஓம் கோமாதாலட்சுமி போற்றி
ஓம் சர்வலட்சுமி போற்றி
ஓம் சக்திலட்சுமி போற்றி
ஓம் சக்ரலட்சுமி போற்றி
ஓம் சத்தியலட்சுமி போற்றி

ஓம் சங்குலட்சுமி போற்றி
ஓம் சந்தானலட்சுமி போற்றி
ஓம் சந்நிதிலட்சுமி போற்றி
ஓம் சாந்தலட்சுமி போற்றி
ஓம் சிங்காரலட்சுமி போற்றி
ஓம் சீவலட்சுமி போற்றி
ஓம் சீதாலட்சுமி போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமி போற்றி
ஓம் சூர்யலட்சுமி போற்றி

- Advertisement -

Lakshmi pujai

ஓம் செல்வலட்சுமி போற்றி
ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி
ஓம் சொர்ணலட்சுமி போற்றி
ஓம் சொருபலட்சுமி போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி
ஓம் ஞானலட்சுமி போற்றி
ஓம் தங்கலட்சுமி போற்றி
ஓம் தனலட்சுமி போற்றி
ஓம் தான்யலட்சுமி போற்றி
ஓம் திரிபுரலட்சுமி போற்றி

ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி
ஓம் திலகலட்சுமி போற்றி
ஓம் தீபலட்சுமி போற்றி
ஓம் துளசிலட்சுமி போற்றி
ஓம் துர்காலட்சுமி போற்றி
ஓம் தூயலட்சுமி போற்றி
ஓம் தெய்வலட்சுமி போற்றி
ஓம் தேவலட்சுமி போற்றி
ஓம் தைரியலட்சுமி போற்றி
ஓம் பங்கயலட்சுமி போற்றி

ஓம் பாக்யலட்சுமி போற்றி
ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி
ஓம் புண்ணியலட்சுமி போற்றி
ஓம் பொருள்லட்சுமி போற்றி
ஓம் பொன்னிறலட்சுமி போற்றி
ஓம் போகலட்சுமி போற்றி
ஓம் மங்களலட்சுமி போற்றி
ஓம் மகாலட்சுமி போற்றி
ஓம் மாதவலட்சுமி போற்றி
ஓம் மாதாலட்சுமி போற்றி

mahalakshmi

ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி
ஓம் மாசிலாலட்சுமி போற்றி
ஓம் முக்திலட்சுமி போற்றி
ஓம் முத்துலட்சுமி போற்றி
ஓம் மோகனலட்சுமி போற்றி
ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி
ஓம் வரலட்சுமி போற்றி
ஓம் வாழும்லட்சுமி போற்றி
ஓம் விளக்குலட்சுமி போற்றி
ஓம் விஜயலட்சுமி போற்றி

ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி
ஓம் வீட்டுலட்சுமி போற்றி
ஓம் வீரலட்சுமி போற்றி
ஓம் வெற்றிலட்சுமி போற்றி
ஓம் வேங்கடலட்சுமி போற்றி
ஓம் வைரலட்சுமி போற்றி
ஓம் வைகுண்டலட்சுமி போற்றி
ஓம் நாராயணலட்சுமி போற்றி
ஓம் நாகலட்சுமி போற்றி
ஓம் நித்தியலட்சுமி போற்றி

ஓம் நீங்காதலட்சுமி போற்றி
ஓம் ராமலட்சுமி போற்றி
ஓம் ராஜலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி
ஓம் ஜெயலட்சுமி போற்றி
ஓம் ஜீவலட்சுமி போற்றி
ஓம் ஜோதிலட்சுமி போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி …

மகாலட்சுமியின் முழுமையான கடாச்சத்தை அளிக்கும் இந்த 108 போற்றிகளை வெள்ளிக்கிழமைகளில் காலையில் உடல் மற்றும் மனசுத்தியுடன் பூஜையறையில் இருக்கும் மகாலட்சுமியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் மற்றும் பத்திகள் கொளுத்தி, கற்கண்டுகள் அல்லது வேறு ஏதேனும் இனிப்புகளை நிவேதித்து, வடதிசையை பார்த்து அமர்ந்த வாறு இந்த 108 போற்றிகளை துதிக்க வேண்டும். அதே போல் மாலை நேரத்திலும் இந்த போற்றிகளை துதிக்க அனைத்து செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும்.

mahalakshmi

பாற்கடலில் வீற்றிருக்கும் பரந்தாமனின் இதயத்தில் வாழ்பவள் ஸ்ரீ மகாலட்சுமி. தன்னை வேண்டும் பக்தனுக்கு செல்வங்களை வழங்கி இன்ன பிற இன்பங்களையும் அளிப்பவள். பணத்தால் அனைத்தையுமே வாங்க முடியாது என்றாலும் ஒருவனுக்கு அவன் விரும்பிய அளவு செல்வங்களை வழங்கி, வாழ்க்கையை அனுபவிக்கச் செய்து இறுதியில் இவை எல்லாம் ஒரு மாயை என்ற ஞானத்தையும் வழங்குவாள். மகாலட்சுமியின் இந்த 108 மந்திரம் அதை கொண்டு அவளை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலங்களும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
பணம், புகழை பெறுகச் செய்யும் குபேர மந்திரம்

English Overview:
Here we have Lakshmi 108 in Tamil. It can also be called as Lakshmi 108 names in Tamil or Lakshmi 108 mantra in Tamil.

- Advertisement -