பணம், புகழை பெறுகச் செய்யும் குபேர மந்திரம்

kuberanl

எப்போதுமே உலகில் வாழும் மனிதர்களுக்கு செல்வம் என்பது அவசிய தேவையாகும். எவருமே செல்வத்தை துறந்து இன்றைய காலத்தில் வாழ்ந்து விட முடியும் என்பது சாத்தியம் இல்லாதது. தான, தர்மம் போன்ற புண்ணிய செயல்களை செய்வதற்கு கூட பணம் தேவைப்படுகிறது. அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும் அவர்களுக்கு பணத்தின் சேமிப்பு ஏற்படாமல் தொடர் செலவுகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் பணம் மற்றும் புகழை ஒருசேர கொடுக்கும் ஸ்ரீ குபேரனின் மந்திரம் அதை கூறி வழிபட வேண்டும்.

guberan

குபேரன் மந்திரம்

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
க்லீம் விட்டேஸ்வராய நமஹ

தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து குபேரனின் படத்திற்கு முன்பு ஏதேனும் இனிப்பை நிவேதனமாக வைத்து, விளக்கெண்ணெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை வட திசையை பார்த்தவாறு நின்று உங்கள் இதயபூர்வமாக குபேரனை வேண்டி 108 முறை கூறி வணங்கி வரவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளைகளிலும் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு செல்வ சேர்க்கை ஏற்படும். மேலும் புகழ், மக்கள் செல்வாக்கு போன்றைவையும் உண்டாகும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பது எல்லா காலங்களிலும் இருந்து வரும் நிதர்சனமான உண்மை. மனிதன் நாகரீகமடைந்த ஒரு சமூகமாக இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து பணம் தான் இந்த உலகை இயக்கும் சக்தியாக இருந்து வருகிறது. நவீன யுக மக்கள் எல்லோரும் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவர் ஈட்டும் செல்வமானது அவசிய தேவைகளுக்காக வாங்கிய கடன்களை அடைக்கவும், அன்றாட குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கே சரியாக இருக்கிறது. எனவே எல்லோருமே வாழ்வில் செல்வத்திற்கு அதிபதியாகிய “குபேரன்” போல் கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகின்றனர்.

Kuberan

இந்த குபேரன் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் சிவபெருமானின் அருள் பெற்று தேவர்கள் போன்ற நிலையை அடைந்தார். மேலும் எட்டு திசைகளில் செல்வங்களுக்கு உரிய வடக்கு திசைக்கு அதிபதியாக கருதி வழிபடபடுகிறார். மேற்கூறிய மந்திரத்தை முறையாக கூறி குபேரனை வழிபட்டால், குபேரனின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு நீங்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் வழங்குவார் ஸ்ரீ குபேரன்.

இதையும் படிக்கலாமே:
குபேரன் வசிய மந்திரம்

English Overview:
Here we have Kuberan mantra in Tamil. One can get good wealth by chanting Kuberan manthiram.