- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிசக்தி வாய்ந்த ராமநவமி வழிபாடு

அதிசக்தி வாய்ந்த ராமநவமி வழிபாடு

- Advertisement -

இன்று ராமநவமி. ராமர் அவதரித்த நாள். இது எல்லோருக்குமே தெரியும். அது என்ன அதிசக்தி வாய்ந்த இராமநவமி. இன்றைய தினத்தில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது. இருள் சூழ்ந்து இருக்கும் உங்களது வாழ்க்கையை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டுவர என்ன வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

இன்றைய தினம் ரவி புஷ்ய யோகம் இருக்கிறது. ரகு குலத்து ராமர், சூரிய வம்சத்தில் பிறந்தவர். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து இந்த ரவி பூஷ்ய யோகமும் வந்திருப்பதால், இந்த நாளுக்கு அதீத சக்தி உண்டு என்று சொல்கிறது ஜோதிடம். இன்றைய தினத்தில் “ராமா ராமா” என்ற மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால் உங்களுடைய துன்பங்கள் உடனடியாக தீரும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் ராமநவமியில், இன்றைய தினத்தில், ராம வழிபாடு செய்தால், செய்யும் தொழில் விருத்தி அடையும். செய்யும் வேலையில் முன்னேற்றம் அடையலாம். வருமானம் பெருகும். வாழ்வு வளம் பெறுவதற்கு காரணம் சூரிய பகவான் தானே. இந்த நாளில் ராம வழிபாடு செய்ய நாம் தவறவிடலாமா. சரி இன்று மாலை எந்த விளக்கு வெளிச்சத்தில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும்.

ஸ்ரீ ராம ஜெயம்

உங்கள் வீட்டு பூஜை அறையில் என்னென்ன விளக்குகள் எல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அத்தனை விளக்குகளையும் ஏற்ற வேண்டும். “ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்” என்ற நாமத்தைச் சொல்லிக் கொண்டே அந்த விளக்கை ஏற்றி விடுங்கள். பிறகு வீட்டில் இருக்கும் மற்ற மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தீப ஒளியில் உங்களுடைய வீட்டில் ராமர் நிறைவாக வந்து அமர்ந்து கொள்வார். இந்த தீப வெளிச்சம் படும் இடத்தில் எல்லாம் ராமரின் சக்தி நிறைவாக இருக்கும். அந்த தீப வெளிச்சத்தில் “ஸ்ரீ ராமஜெயம்” எழுத வேண்டும். 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பக்கத்தில் வெறுமனே ஒரு மனப்பளகையை போட்டு அதன் மேலே ஒரு துண்டு விரித்து விடுங்கள்.

அந்த இடத்தில் அனுமன் வந்து உட்கார்ந்து கொள்வார். ஸ்ரீ ராம ஜெயம் எழுதிவிட்டு இந்த விளக்கு வெளிச்சத்திலேயே உங்களுடைய பிரச்சனைகளை ராமரிடம் சொல்லி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொண்டால் இன்று நீங்கள் ராமரிடம் சொன்ன வேண்டுதல் உடனடியாக அடுத்த பத்து நாட்களுக்குள் பலிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

ராமநவமி பத்து நாள் முன்பும் திருவிழா தான். ராம நவமிக்கு பத்து நாட்களுக்கு பின்பும் திருவிழா தான். நீங்கள் இந்த பின் 10 நாட்களை பிடித்துக் கொள்ளுங்கள். ராமநவமிக்கு அடுத்து வரக்கூடிய 10 நாட்களும் மேல் சொன்ன முறைப்படி ராமஜெயம் எழுதி பாருங்கள். உங்களை தோற்கடிக்க இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. உங்களுக்கு துணையாக அனுமனும் வந்து நிற்பார். நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்ட வெற்றியை கொடுக்கும். உங்களை ராஜ சிம்மாசனத்தில் அமர வைக்கும் அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றி விடும்.

இதையும் படிக்கலாமே: ராம நவமி ஸ்பெஷல் கோசம்பரி செய்யும் முறை

ராஜ சிம்மாசனத்தில் அமருவோமா. ஆமாங்க, ராமரோடு இருந்த விபீஷ்னர் சுக்ரீவர் இப்படி பல பேருக்கு ராஜ சிம்மாசனம் கிடைத்த காரணமாக இருந்தவர் ராமபிரான். நமக்கு ஒரு ராஜ சிம்மாசனத்தை கொடுக்க மாட்டாரா. நம்பிக்கை இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு சொந்தமானது, என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்

சற்று முன்