ரூபாயை எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு வேண்டுமா? லட்சுமி குபேர தீபத்தை முறையாக இப்படி ஏற்றுங்கள்.

kuberan
- Advertisement -

அதிகப்படியான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு மனநிம்மதி அவசியம். வெளியில் சென்று வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு வீட்டுக்குள் நுழையும் போது ஒருவிதமான மன அமைதி ஏற்பட வேண்டுமே தவிர வீட்டிற்குள் ‘ஏன் தான் நுழைந்தோம்’ என்றபடி சிந்திக்கக் கூடாது. முதலில் வீடு கோவில் போன்ற அமைப்பினை பெறவேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் மன நிம்மதியான வாழ்க்கையை பெற்று, நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற்று சந்தோசமாக வாழ்ந்தாலே பணவரவு தானாக வந்துவிடும். சந்தோசமான சூழ்நிலையில் இருக்கும் ஒரு வீட்டில், வரும் வருமானத்தையும், சந்தோஷத்தையும், மன அமைதியையும் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாது. மூட்டையில் கட்டி வேண்டுமென்றால் பரண் மேல் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டிலும் அளவற்ற மகிழ்ச்சியும், அளவற்ற சந்தோஷமும், அளவற்ற நிம்மதியும் அளவற்ற செல்வத்தையும் பெற வேண்டுமா? இந்த குபேர தீபத்தை முறைப்படி ஏற்றினாலே போதும்.

kubera deepam

ஆரோக்கியமான பணவரவை நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான அழகான குடும்பம் தேவை. நம்முடைய பணத் தேவைக்காக மட்டும் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டுமா? என்றால் கட்டாயம் கிடையாது. நம் குடும்பத்தில் உள்ளவர்களின் அனைவரின் நலனுக்காகவும், சந்தோஷத்துக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் ஏற்றப்படும் தீபம் தான் இந்த லட்சுமி குபேர தீபம்.

- Advertisement -

லட்சுமி குபேர தீபத்தினை ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள். சிறிய தாம்பூலத் தட்டு, பச்சரிசி சிறிதளவு, மண் அகல் தீபம் ஒன்று, தேங்காய் எண்ணெய், விளக்குத் திரி, ஏலக்காயின் உள்ளே இருக்கும் விதை சிறிதளவு, குபேர எண் எந்திரம் டாலர், ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர். அதனுடன் சிறிதளவு பன்னீர் கலந்து இருக்க வேண்டும். வாசனை நிறைந்த பூக்கள்.

kubera-yantra

முதலில் தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, விளக்கு திரி போட்டு, குபேர எந்திரம் நாணயத்தை எண்ணைக்குள் போட்டு, அதன்மேல் ஏலக்காய் விதைகளை தூவி விளக்கினை தயார் செய்துகொள்ள வேண்டும். குபேரரின் எண்கள் பதித்த எந்திர டாலர் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கின்றது.

- Advertisement -

தீபம் ஏற்ற தயார் செய்து வைத்த பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் தண்ணீரை ஊற்றி, சிறிதளவு பன்னீர் கலந்து, அதன் மேல் வாசனை மிகுந்த பூக்களை தூவி விட வேண்டும். அதன்பின்பு மகாலட்சுமியையும், குபேரரையும் நினைத்து இந்த தீபத்தை, காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் ஏற்றிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்குவது சிறப்பு.

agal vilakku

இந்த தீபத்தை ஈசானிய மூலையில் வடகிழக்கில் வைத்து, தென் மேற்கு நோக்கி தீப சுடர் எரியும்படி வைத்துவிட வேண்டும். முடிந்தவரை இந்த விளக்கை தினந்தோறும் ஏற்றுவது நல்ல பலனைத் தரும். முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர குறைந்தது 48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றினால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும். பெண்களுக்கு ஏற்ற முடியாத இயற்கை உபாதைகள் வரும் சமயத்தில் ஆண்கள் இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

தீபத்தை ஏற்றும் இந்த 48 நாட்களும் வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தீபத்தின் உள்ளே இருக்கும் ஏலக்காயையும், தீபத்தின் அருகில் இருக்கும் தண்ணீரையும் மாற்றினால் போதும். தண்ணீரில் மிதக்கும் பூக்கள் வாடினால் மட்டும் எடுத்துவிட்டு, புதிய பூவை போடுவது நல்லது. இந்த தீபம் பணக் கஷ்டத்தை காக மட்டும் ஏற்றப்படுவது அல்ல. எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும், எப்படிப்பட்ட கடன் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன உருதியானது உங்களுக்கு வரும் என்பதை இந்த தீபம் ஏற்றி முடித்த 48 வது நாளில் தான் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறைப்படி இந்த தீபத்தை ஏற்றி வைத்து பலனடையலாம்.

money

பணத்தை யார் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் மன நிம்மதியானது யார் கேட்டாலும் கிடைத்துவிடாது. அது இறைவனின் ஆசீர்வாதத்தால் தான் நமக்கு கிடைக்கும். அளவோடு பணத்தை வைத்துக்கொண்டு, அளவற்ற மகிழ்ச்சியோடு, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்காமல், இந்த தலைமுறையில் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே
நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கும் குல தெய்வ முடிச்சு. இந்த 3 பொருட்களையும் சேர்த்து நம் வீட்டு வாசலில் கட்டினாலே போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lakshmi kubera deepam with coins. Lakshmi kubera vilakku. Lakshmi kubera yantra in Tamil. Kubera yantra in Tamil. Lakshmi kubera pooja in Tamil.

- Advertisement -