நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கும் குல தெய்வ முடிச்சு. இந்த 3 பொருட்களையும் சேர்த்து நம் வீட்டு வாசலில் கட்டினாலே போதும்!

- Advertisement -

நம்மையும், நம் வீட்டையும், நம் குலத்தையும் பாதுகாப்பது நம்முடைய குல தெய்வம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு மஞ்சள் துணியை எடுத்து, ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்தாலே நம் வேண்டுதல் கட்டாயமாக நிறைவேறிவிடும். நம்முடைய வீட்டில் தீர்க்கமுடியாத பிரச்சனை, கண் திருஷ்டியால் அவதிப்பட்டு வருகின்றோம். இனம்புரியாத உடல் சோர்வு, வேலையில் ஈடுபாடு இன்மை, இப்படி ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு நம் தலையை சுற்றி தூக்கி வீசி விட்டாலே, நம் பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

kan-thirusti

மஞ்சள் நிறத் துணி, ஒரு ரூபாய் நாணயம், மஞ்சள் நிற எலுமிச்சை பழம். இந்த மூன்று பொருட்களுக்கும் குலதெய்வத்தை வசீகரிக்கும் சக்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மூன்று பொருட்களை தனித்தனியாக பிரயோகப்படுத்தினாலே, இத்தனை சக்தியை நம்மால் அடைய முடிகிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைத்து ஒரு பரிகாரத்தை செய்தோமேயானால் அது நமக்கு அதிக பலனைப் பெற்றுத் தரும், என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நம்மையும் நம் வீட்டையும், கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கவசமானது தேவைப்படுகிறது. இந்தப் பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கும் முடிச்சை எப்படி நம் வீட்டு வாசலில் கட்ட வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வளர்பிறையில் வரும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனைத் தரும். புதியதாக வாங்கப்பட்ட வெள்ளை துணியை, மஞ்சள் தண்ணீரில் நனைத்து நிழலிலேயே உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நிற துணியாக வாங்கக்கூடாது. கட்டாயம் வெள்ளை நிறத் துணியை மஞ்சளில் நினைத்துதான் நிறத்தை மாற்ற வேண்டும். அந்த மஞ்சள் நிற துணியில் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை முக்கோண வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாணயங்களுக்கு நடுவில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து பச்சை நிற நூலில் ஒரு முடிச்சாக கட்டிக்கொள்ள வேண்டும்.

elumichai lemon

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்க ஆரம்பித்த அந்த நிமிடத்திலிருந்து, உங்களது கஷ்டங்களை இந்த பொருட்களிடம் மனசார சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது உங்கள் மனதளவில் தீர்க்க முடியாத கஷ்டங்கள் ஏதாவது இருக்கலாம். பண பிரச்சனையாக அல்லது மனரீதியான பிரச்சினையாக இருக்கலாம். நோய் பிரச்சினையாக இருக்கலாம். இப்படி உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் மனதார உங்கள் குலதெய்வத்திடம் முறையிடுவதாக எண்ணி இந்த முடிச்சினை தயார் செய்யும்போது பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

தயார் செய்யப்பட்ட இந்த முடிச்சை எடுத்து, உங்கள் வீட்டு நில வாசப்படியில் நடுவே ஒரு ஆணி அடித்து அதில் மாற்றிவிட வேண்டும். ஆணியை நில வாசல் மரத்தில் அடிக்க வேண்டாம். சுவற்றில் அடித்து தான் மாட்ட வேண்டும். இந்த முடிச்சை மாட்டும் சமயத்தில் ‘ஓம் குலதேவதாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்த பின்பு தான் மாட்ட வேண்டும்.

Palani Murugan

இதை மாதத்திற்கு ஒருமுறை மாட்ட வேண்டும். மஞ்சள் துணியையும் சேர்த்து தான் புதியதாக மாற்றுவது நல்ல பலனை தரும். மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் உங்கள் குலதெய்வ கோவிலில் செலுத்தி விடலாம். எலுமிச்சை பழத்தை கால் படாத இடங்களில் போட்டுவிடலாம். மாதம் ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், உங்களது குலதெய்வம் பழனி முருகராக இருந்தால், உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று போட்டு விடலாம். இப்படியாக உங்களது குலதெய்வத்தை, உங்கள் வீட்டு வாசலில் காவல் தெய்வமாக நீங்கள் கட்டி விட்டீர்கள் என்றால் எந்த வித கெட்ட சக்திக்கும், எந்தவித கண் திருஷ்டிக்கும் பயப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இருக்காது. வெள்ளிக்கிழமை தினத்தன்று, பௌர்ணமி நாள் வந்தால், அந்த தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது. வாழ்வை வளமாக மாற்றிக் கொள்வதற்கு குலதெய்வ வழிபாடு சிறந்தது என்பதை என்றும் நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த தெய்வங்கள் எல்லாம் நின்ற நிலையில் இருந்தால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kula dheivam. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil. Kula deivam valipadu Tamil.

- Advertisement -