உங்களின் தீராத கடன் பிரச்சனை விரைவில் தீர இவற்றை செய்யுங்கள்

lakshmi-narasimma

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிற ஒரு பழமொழி உண்டு. வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்கள், துயரங்கள் ஏற்பட்டு நொந்து போன மனிதர்களுக்கு சக மனிதர்களைக் காட்டிலும் தெய்வங்களின் அருள் நிச்சயம் உதவுவதாக அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி தன் பக்தருக்கு துன்பம் ஏற்பட்ட காலத்தில் அழைத்தவுடன் உடனே தோன்றி, அந்த பக்தனின் துயரை போக்கிய ஒரு புராண நிகழ்வாக மகாவிஷ்ணுவின் நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. காக்கும் கடவுளான அந்த நரசிம்மருக்குரிய “லட்சுமி நரசிம்மர் ஹோமம்” செய்வதால் நமக்கு ஏற்படும் மிக அற்புதமான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

narasimmar

வெள்ளிக்கிழமைகள் அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற தினங்களில் இந்த லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த லட்சுமி நரசிம்ம ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். மாந்திரீக பாதிப்புகள், துஷ்ட சக்திகளின் தொல்லைகளை நீக்க வீடுகளில் இந்த ஹோமத்தை செய்து கொள்ளலாம். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

இந்த லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்யும் போது லட்சுமி நரசிம்மருக்கு தாமரை பூக்கள் சமர்ப்பித்து, வெல்லம் கொண்டு செய்யப்படும் பானகம் நைவேத்தியமாக வைக்க வேண்டும். ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது. பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும், அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. பிரசாதமான பானகத்தை ஹோமம் பூஜை செய்தவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அருந்த வேண்டும்.

homam

லட்சுமி நரசிம்ம ஹோமத்தை செய்து கொள்வதால் தம்பதிகள் மற்றும் பிற உறவினர்களுடன் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். காரியங்களில் தடை, தாமதங்கள் இல்லாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வச் சேர்க்கை போன்ற பாக்கியங்களை தரும். வசிக்கின்ற வீடுகளில் ஏற்பட்டிருந்த துஷ்ட சக்தி பாதிப்புகள், மாந்திரிக ஏவல்கள் போன்றவற்றின் தீய அதிர்வுகள் முற்றிலும் நீங்கி நன்மையான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கடன் பிரச்சனையும் விரைவில் தீருவதற்கான வழிகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
மீனம் ராசியினருக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi narasimha homam in Tamil. It is also called as Kadan theera in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.