மீனம் ராசியினருக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்கள் உண்டாக இவற்றை செய்யுங்கள்

guru-bhagawan

“அஹம் பிரம்மாஸ்மி” என்கிற ஒரு சமஸ்கிருத சொல் பலராலும் உச்சரிக்கப்படும் ஒரு மந்திர வாக்கியமாக இருக்கிறது. இதன் பொருள் “மனமே எல்லாம்” என்பதாகும். எந்த ஒரு மனிதருக்கும் அவர்களின் மனம் செம்மையானால் அதுவே குருவாக மாறும். ஆனால் அந்த மனம் குருவாக மாறுவதற்கும் ஞான குருவின் ஆசிகள் அவசியம். ஒரு மனிதனுக்கு வாழ்வில் இன்பங்கள், தெய்வீக ஞானத்தை வழங்கும் கிரகமாக குருபகவான் இருக்கிறார். அந்த குரு பகவானுக்குரிய ராசியாக மீனம் ராசி இருக்கிறது. இந்த மீன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

guru bagwan

ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் 12 ஆவதும், இறுதியான ராசியாகவும் வருவது மீனம் எனப்படும் ராசியாகும். இந்த மீனம் ராசியின் அதிபதியாக நவகிரங்களில் முழுமையான சுபகிரகம் ஆன குரு பகவான் இருக்கிறார். மீனம் ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுதியான யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை திட சித்ததோடு செய்து வருவது அவசியம்

மீன ராசியில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூரில் இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு உங்களுக்கு வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெற்றுத் தருவதாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஆழ்வார் திருநகரி கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஆதிநாதர் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்வதால் குரு பகவானின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிகரிக்கும்.

Guru baghavan

உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற மலர்கள், சந்தனம் போன்றவற்றை தானமாக அளிப்பது உங்களுக்கு குரு பகவானின் அருள் கிடைத்து மிகுதியான வாழ்வில் யோகங்கள் உண்டாக வழி வகுக்கும். வியாழக்கிழமைகளில் கோயில் பசுக்கள், யானை போன்றவற்றிற்கு உணவாக வாழைப்பழங்கள் கொடுப்பது அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். கோயில்களில் நடைபெறும் ஹோமங்களுக்கு நெய், அரிசி, போன்ற பொருட்களை தானம் அளிப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
எதிர்பாரா விபத்துகள், ஆபத்துகளை தடுக்க இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Meenam rasi tips in Tamil. It is also called Meena rasi pariharam in Tamil or Meenam rasi in Tamil or Rasi pariharam in Tamil or Jothida pariharam in Tamil.