தொடர்ந்து 48 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். கடன் என்ற வார்த்தைக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் இல்லை. எவ்வளவு பெரிய கடனையும் சீக்கிரம் அடைச்சிடுவீங்க!

lakshmi-narasimar

48 வாரங்கள் தீப வழிபாடா? கடனை அடைக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என்று மலைத்துப் போக வேண்டாம். பூஜையை தொடங்கிய நாள் முதலே உங்களது கடன் பிரச்சனை படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிடும். எப்படியாவது வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் முழுமையாக நீங்கிவிடும். முடிந்தவரை கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வாங்கிய கடனை எப்படியாவது திருப்பித் தர முயற்சி செய்து கொண்டே இருங்க! உங்களுடைய முயற்சிக்கு இந்த ஆன்மீக ரீதியான வழிபாடு நிச்சயமாக கைகொடுக்கும். ஆத்மார்த்தமாக செய்ய வேண்டிய லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை பற்றித்தான், இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan

நிறைய பேருக்கு லட்சுமி நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்துக் கொள்வதற்கு பயம் உள்ளது. நரசிம்மரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கிறது. பயம் வேண்டாம். லட்சுமிநரசிம்மர் படத்தை தாராளமாக நம்முடைய வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். உங்களுக்கு மன பயம் அதிகமாக இருந்தால், லட்சுமி நரசிம்மருடைய படத்தை வாங்கி வைத்த முதல் நாள், ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அந்தப் பழத்தை சுற்றி, இரண்டாக நறுக்கி போட்டு விடுங்கள். தோஷம் நிவர்த்தி ஆகி விடும்.

சரி, பரிகாரத்தை பார்த்துவிடுவோம். இந்த பரிகாரத்திற்கு உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி நரசிம்மரின் திருவுருவப்படம் வடக்குப் பார்த்தவாறு மாட்டி இயிருக்க வேண்டும். இந்த பூஜைக்காக ஒரு புதிய மண் அகல் விளக்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து, தீபம் வடக்குப் பார்த்தவாறு எரிய வேண்டும்.

color-thiri

குழப்பம் வேண்டாம். லக்ஷ்மி நரசிம்மரும் வடக்கை பார்த்து இருப்பார். வடக்கை பார்த்து தீபமும் இருக்கும். அவ்வளவு தான். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு லட்சுமி நரசிம்மருக்கு கட்டாயமாக ஒரு டம்ளரில் பானகத்தை நிவேதனமாக வைக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் வெல்லம், ஏலக்காய், சுக்கு தூள், கலந்த கலவையோ பானகம். இது நமக்கு தெரிந்ததுதான்.

- Advertisement -

வாரம் தோறும் வரும் செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி வைத்திருக்க வேண்டும். அந்த ஒரு மணி நேரமும் உங்கள் வீட்டில், இந்த தீபம் ஒளிர வேண்டும். பூஜை முடிந்தவுடன் வீட்டிலிருக்கும் யாராவது அந்த பானகத்தை குடித்து விடலாம். தீபம் ஏற்ற, சிகப்பு திரியை கடையிலிருந்து வாங்குவதை விட, சிகப்பு காட்டன் துணியை வாங்கி முதலில் சுத்தமான தண்ணீரில் நனைத்து, உலர வைத்து, அதன் பின்பு அந்தத் துணியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, திரி போல் திரித்து பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

deepam

இந்த தீபம் ஒளிரும் அந்த ஒரு மணி நேரத்திற்குள் உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று, லக்ஷ்மி நரசிம்மரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் லட்சுமி நரசிம்மரின், ருணவிமோசன மந்திரத்தை உச்சரிப்பது, கூடிய விரைவில் மேலும் நல்ல பலனை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், அந்த மந்திரத்தை ஒலிக்கிவிட்டு காதில் கேட்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள் உங்கள். கடன் பிரச்சனை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கடன் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் சக்தி மிக்க மந்திரம் இதோ

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.