உங்கள் கடன் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் சக்தி மிக்க மந்திரம் இதோ

narasimmha

இருப்பதை வைத்து மனத்திருப்தியுடன் வாழும் கலையை ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டால் வாழ்வில் துன்பம் என்பதே இருக்காது. குறிப்பாக பணம் விடயங்களில் இந்த திறனை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு விடயத்திற்கும் கடன் வாங்க கூடாது என்று நினைப்பவர்களையும் கால சூழ்நிலை கடன் வாங்கும் நிலைக்கு உட்படுத்தி விடுகிறது. அப்படி கடன் வாங்கியவர்களில் பலர் அந்த கடனை திருப்பி கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இவர்களின் இத்தகைய கஷ்டங்களை போக்கும் தெய்வமாக ஸ்ரீ நரசிம்மமூர்த்தி இருக்கிறார். அவரை வழிபடவேண்டிய “ருண விமோச்சன ஸ்தோத்திரம்” வீடியோ

Narasimmar

ருண விமோசன ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

Narasimmar

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே

- Advertisement -

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

narasima vadham

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்குரிய அற்புதமான மந்திரம் இது. மிகுந்த கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலை, மாலை இருவேளையும் நரசிம்மர் மீது நம்பிக்கையுடன் வீட்டில் சிறிய அளவிலான லட்சுமி நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்த பின் பாலில் கல்கண்டு சேர்த்து, பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்னைகளிலிருந்தும் சீக்கிரம் விடுபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ தினத்தில் நரசிம்மர் கோயிலில் மேற்கூறிய மந்திரம் துதிப்பது பலன்களை விரைவாக தரும்.

narasimha 3

புராணங்களில் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ நாராயணனின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். இதை கண்டு மனம் குளிர்ந்த திருமால் தனது பக்தன் பிரகலாதனை காக்க “நரசிம்ம அவதாரம்” எடுத்து அவனை ரட்சித்தார். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும் ஸ்ரீ நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே:
கஷ்டங்கள் நீங்கி வளமை உண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Runa vimochana stotram in Tamil. It is also called as Narasimhar mantra in Tamil or Narasimha Slokas in Tamil or Kadan prachanai theera manthiram in Tamil or Narasimhar manthirangal in Tamil.