மகாலட்சுமியின் முன்பு இந்த பொருட்களை வைத்து பூஜை செய்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்ட தேவதை ஐக்கியமாகி விடுவாள்.

mahalashmi5

அதிர்ஷ்டத்தை நம் வசப்படுத்த, நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்துக்கொள்ள, மகாலட்சுமி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. மகாலட்சுமியை வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த முறையில் வழிபாடு செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் ஐக்கியமாகும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பூஜையை வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம். பௌர்ணமி தினத்தில் செய்யலாம். வீட்டுப் பெண்களின் கையால் தான் இந்த பூஜை செய்ய வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.

adhirshta-lakshmi2

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால், எல்லோருடைய வீடும் சுத்தமாகவும் மங்களகரமாகவும் தான் இருக்கும். உங்கள் வீட்டு பூஜை அறையில், அதிர்ஷ்டலட்சுமியான மகாலட்சுமியின் இந்த திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது ஆந்தையுடன் கையில் கலசத்தை ஏந்தி வைத்திருக்கும் இவர்களை அதிர்ஷ்ட தேவதை என்று கூட சொல்வார்கள்.

இந்த அதிர்ஷ்ட தேவதையின் திருவுருவப்படம் கட்டாயம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இருக்க வேண்டும். இந்த படம் இருக்கும் வீட்டில் நிச்சயம் அதிர்ஷ்டம் இருக்கும். இந்த படத்தை கிழக்கு பார்த்தவாறு வைத்துவிட்டு, படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கலச சொம்பு நிரம்ப பச்சரிசியை நிரப்பி விட்டு, பச்சரிசியின் மேலே 9 குண்டு மஞ்சளை அடுக்கி வைத்து விட வேண்டும். ஒவ்வொரு குண்டு மஞ்சளுக்கும் சந்தனமும் ஜவ்வாதும் குங்குமமும் இட்டு விடுங்கள்.

adhirshta-lakshmi

அதன்பின்பு வாசனை மிகுந்த பூக்களால் இந்த கலச சொம்பிற்க்கும் 108 முறை ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து விட வேண்டும். உதிரி புஷ்பங்கள் கிடைக்காதவர்கள் தாழம்பூ குங்குமம் என்று சொல்லப்படும், வாசனை நிறைந்த குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். ஒரு வெற்றிலையின் மீது அர்ச்சனை செய்துவிட்டு அந்த குங்குமத்தை தினம்தோறும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால், வீட்டில் அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் நிலைத்திருக்கும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் உங்களுடைய நட்சத்திரத்திற்கு உகந்த பூக்களை இந்த பூஜைக்கு பயன்படுத்துவது மிக மிக நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. முடியாதவர்கள் தாராளமாக வாசனை நிறைந்த மற்ற பூக்களை வைத்து அர்ச்சனை செய்து கொள்வதிலும் தவறு கிடையாது. சரி உங்களுடைய நட்சத்திரத்திற்கு உண்டான பூ எது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

mahalakshmi2

அஸ்வினி சாமந்தி
பரணி முல்லை
கார்த்திகை செவ்வரளி
ரோகினி பாரிஜாதம்
மிருகசிரிஷம் ஜாதி மல்லி

திருவாதிரை வில்வப் பூ
புனர்பூசம் மரிக்கொழுந்து
பூசம் பன்னீர் ரோஜா
ஆயில்யம் செவ்வரளி
மகம் மல்லிகை

senthamarai

பூரம் தாமரை
உத்திரம் கதம்பம்
அஸ்தம் வெள்ளைத் தாமரை
சித்திரை மந்தாரை
சுவாதி பொன்னரளி

flower

விசாகம் இருவாட்சி
அனுஷம் சிவப்பு முல்லை
கேட்டை பன்னீர் ரோஜா
மூலம் வெள்ளை சங்குப்பூ
பூராடம் விருட்சி

sangu-poo

உத்திராடம் சம்பங்கி
திருவோணம் சிவப்பு ரோஜா
அவிட்டம் செண்பகம்
சதயம் நீலோற்பவம்
பூரட்டாதி வெள்ளை அரளி

உத்திரட்டாதி நந்தியாவட்டம்
ரேவதி செம்பருத்தி

இந்த பூஜையை தொடர்ந்து இத்தனை நாட்கள் தான், இத்தனை வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் செய்தாலும் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வறுமை நீங்கும். செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கையை வாழ இந்த சுலபமான பூஜையை செய்து அனைவரும் பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அடடா! பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் வருவதற்கு இது கூடவா ஒரு காரணம். இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.