அடடா! பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் வருவதற்கு இது கூடவா ஒரு காரணம். இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!

kolusu

கடந்த சில வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே தான் வருகின்றது. இதற்கு நவநாகரீகம் என்ற பெயரில், நவீனமயமாகி வந்து கொண்டிருக்கும் ஃபேசனும் ஒரு காரணம் தான். அதாவது பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், சில விஷயங்களில் மாறுதலை நாம் கொண்டு வரும்போது, நமக்கே தெரியாமல், அது நமக்கு கஷ்டத்தை கொடுத்து விடுகின்றது. அந்த வரிசையில் பெண்களின் அழகிற்காக கொண்டுவரப்பட்ட மாறுதல்களில், உண்டாகக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women

நவநாகரீக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை அணிகலன்களில் பெரிய மாற்றம் இன்றைய சூழ்நிலையில் நிலவி வருகிறது. ஃபேஷன் என்று சொல்லி சில பழக்கவழக்கங்களை எல்லாம் நாம் மாற்றி விட்டோம். அந்த வரிசையில் வெள்ளி அணிகலன்களைப் பற்றி நாம் என்று தெரிந்து கொள்வோம்.

அந்தக் காலத்தில் பெண்கள் வெள்ளியினால் செய்யப்பட்ட அணிகலன்களை அதிகமாக பயன்பாட்டில் வைத்திருந்தார்கள். அந்த வரிசையில் குறிப்பாக முதலில் சொல்லப்படுவது வெள்ளி கொலுசு. கன்னி பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி கண்ணுக்குத் தெரியாத காத்து கருப்பு அவர்களை அண்டக் கூடாது என்பதற்காகத்தான் வெள்ளி உலோகத்தில், அதிக முத்துக்களை வைத்த கொலுசு தண்டைகலை அந்த காலத்தில் அணிந்து வந்தார்கள்.

kolusu

அதாவது வெள்ளி என்றாலே வெளிச்சம். வெள்ளி என்றாலே பாதுகாப்பு. வெள்ளி என்றால் அதற்கு தோஷம் இல்லை. வெள்ளியை கண்டால் எதிர்மறை ஆற்றல் காத்து கருப்பு அஞ்சி நடுங்கும். வெள்ளி கொலுசில் வரக்கூடிய சலங்கை சத்தத்திற்கு எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை அண்டாது. இதனால் தான் பெண்கள் அந்த காலத்தில் வெள்ளிக்கொலுசை அதிகப்படியான சத்தம் எழுப்பும் சலங்கையோடு அணிந்து வந்தனர்.

- Advertisement -

இன்று அதை நவநாகரிகம் என்று சொல்லி, அதிக சத்தம் எழுப்பும் கொலுசு அணிந்து கொண்டால் மோகினி பிசாசு என்று சொல்லி, கொலுசில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி முத்துக்கள் குறைக்கப்பட்டு, இன்று சலங்கை இல்லாத கொலுசுகள் வரை வந்துவிட்டது. பெண்கள் காலநேரம் இல்லாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலினால், பிரச்சனைகள் வருவதற்கு இது கூட ஒரு காரணம் தான்.

kolusu1

அடுத்ததாக வெள்ளி மூக்குத்தி. கருப்பாக இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, முக வசீகரத்தை கொடுக்கக்கூடியது மூக்குத்தி. இன்று அதை போடும் பழக்கமே பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. ‌குறிப்பாக வெளியில் மூக்குத்தியை அணிந்து கொள்ளும் பெண்களுக்கு முக வசீகரம் இயற்கையாகவே ஏற்படும்.

kolusu2

தங்கத்தை கூட தோஷம் தாக்கும். ஆனால் வெள்ளியை எந்த தோஷமும் தாக்காது. இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு கூட வெளியில் அரைஞான் கயிறு கட்டி இடுப்பு பகுதியை பாதுகாக்கின்றனர். இடுப்புப்பகுதி பாதுகாப்பாக இருந்தால், எதிர்மறை ஆற்றலிடம் இருந்து எந்த பிரச்சனையும், அந்த குழந்தைக்கு வராது என்பது ஐதீகம்.

araijan-kayar

இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் அந்தக் காலத்தில் ஆண்கள் கூட காலில் சத்தம் வரக்கூடிய வெள்ளி சண்டையை அணிந்து வந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்மை பாதுகாத்து வரும் ஆன்மீக விஷயங்கள் ஒவ்வொன்றாக, நாகரீகம் என்ற பெயரில் நாம் என்றைக்கும் மாற்ற தொடங்கிவிட்டோமோ, அன்றைக்கே நம்மை கஷ்டங்கள் தொற்றிக்கொண்டது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த உண்டியலில் பணம் போட்டு வைத்தால், கடனை திருப்பிக் கொடுக்க காசு சீக்கிரமா சேரும். கடன் தொல்லையில் இருந்து சீக்கிரமே விடிவுகாலம் பிறந்திடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.