யாருடைய வீட்டில் லக்ஷ்மி நிரந்தரமாக தங்குவாள் தெரியுமா? உங்கள் வீட்டிலும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய இந்த 3 விஷயங்களைத் தவறாமல் கடைபிடியுங்கள்!

lakshmi-rice-water

ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஏனெனில் லட்சுமி தேவி என்பது பணம், சொத்துக்கள், ரத்தினங்கள், நகைகள் போன்றவற்றை குறிப்பதாகும். இவைகள் எல்லோரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கி விடுவது இல்லை. இன்று உங்களுடைய பொருள், நாளை வேறு ஒருவர் உடையதாக மாறிவிடுகிறது. இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை கட்டாயம் வேறு ஒருவர் கையில் தான் இருக்கும். ஆக பணம் என்பது நிலையானது அல்ல. அதே போல் தான் லட்சுமி தேவி நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை.

dhanalakshmi

லக்ஷ்மி தேவிக்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது, நம்முடனேயே நிரந்தரமாக தங்கி விடுவதும் உண்டு. இதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல கர்மாக்கள் அதிகமாக இருக்கும் எல்லோரிடமும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் இன்று கெட்டதை ஒரு பணக்காரன் செய்து கொண்டிருந்தாலும், அவனுக்கு மென்மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் செய்த பூர்வ ஜென்ம கர்மா அவனைப் பணக்காரனாகவே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது.

லட்சுமி தேவிக்கு பிடித்தமான விஷயங்கள் என்ன? அதை நாம் செய்யும் பொழுது நம்மிடமும் பணம் கோடி கோடியாக சேர்ந்து கொண்டே இருக்குமா? நிரந்தரமில்லாத பணத்தை, நம்மிடம் நிரந்தரமாக வைத்துக் கொள்ள என்னதான் செய்வது? வீட்டில் இந்த 3 விஷயங்களைக் கடைப்பிடித்தால், உங்களிடமும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். தடையில்லாத வருமானமும், வியாபார விருத்தியும் உண்டாகும். கையில் பணம் எந்த அளவிற்கு செலவாகிக் கொண்டே இருக்கிறதோ! அதே அளவிற்கு வரவாகவும் வரும். அதற்கு என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money4

ஒருவருடைய கையில் பணம் தங்குவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஒன்றுதான். பணத்தை செலவு செய்வது! நீங்கள் பணத்தை எந்த அளவிற்கு செலவு செய்கிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களிடம் அது மீண்டும் மீண்டும் வரும் என்பது பணத்தின் உடைய ரகசிய விதியாகும். இம்மாதம் இவ்வளவு தான் சம்பளம் வரும். இதற்குள் என்ன செய்ய முடியுமோ? அதை தான் செய்ய முடியும் என்று நீங்களாகவே தடை போட்டு கொள்ள கூடாது.

- Advertisement -

அதுபோல் உங்களுக்காக பணத்தை செலவு செய்வதை விட, மற்றவர்களுக்காக மற்றவர்களுடைய பசியைப் போக்கவும், ஏழ்மையை தீர்க்கவும் ஒரு சிறு தொகையை செலவு செய்தால் கூட, நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் பணம் உங்களைத் தேடி வரும். இதைக் கேட்பதற்கு நம்ப முடியாத மாதிரி இருந்தாலும், செய்து பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும். பல அறிஞர்கள் தங்களுடைய அனுபவத்தில் கண்ட உண்மையான பரிகாரம் இதுதான். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்பது பழமொழி மட்டுமல்ல உண்மையும் கூட.

pichai-thanam

பணம் அதிகமாக இருப்பவன் அன்னதானங்கள் செய்வதும், அடுத்தவர்களுக்கு பணமாக உதவி செய்வதும், பொருளாக உதவி செய்வதும் சுலபமான விஷயம் தான். ஆனால் பணம் இல்லாதவர்கள் இவற்றையெல்லாம் செய்வது கடினம். அப்படிபட்ட நீங்கள் என்ன செய்யலாம் தெரியுமா? யாருடைய மனதில் உண்மையாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும்? என்கிற எண்ணம் இருக்கிறதோ! அவர்களிடத்தில் கட்டாயம் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். உண்மையான மனதுடன் தினமும் ஒருவருடைய பசியைப் போக்கி பாருங்கள்.

thanam

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும், வணிகம் செய்பவர்களாக இருந்தாலும், உத்தியோகத்தில் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், உங்களுக்கு கிடைக்கும் ஒரு சிறிய நேரத்தில் மற்றவர்களுடைய பசியை போக்குவதற்கு உதவி செய்யுங்கள். தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செய்யுங்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் மொட்டை மாடி பகுதியில் தண்ணீர் வைப்பதும், தானியங்கள் வைப்பதும் கூட பறவைகளின் பசியை போக்கும். வாசலுக்கு வெளியில் பாக்கெட்டில் தண்ணீரை வைத்தால் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.

rice-wash-water

நீங்கள் சாதம் வடிக்கும் கஞ்சி தண்ணீரை எப்பொழுதும் வீணாக்கி விடாதீர்கள். அவற்றை சேகரித்து பசுமாட்டிற்கு வையுங்கள். தினமும் வீட்டில் வீணாகும் காய்கறிகள், பழங்கள் இந்தக் கஞ்சி தண்ணீருடன் சேர்த்து பசு மாட்டிற்கு வைக்கும் பொழுது லக்ஷ்மி தேவி உங்களிடம் நிரந்தரமாக வாசம் செய்வாள். கஷ்டப்பட்ட உறவினர்களுக்கு உங்களிடம் இருக்கும் பண உதவி தாராளமாக செய்யுங்கள். பிரதிபலனை எதிர்பாராமல் செய்யுங்கள். உங்களுடைய ரத்த உறவுக்கு நீங்கள் செய்யாத ஒரு தானம், யாருக்கோ செய்வதால் என்ன பிரயோஜனம்? பந்தம், பாசம் இருக்குமிடத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்வாள். இவைகளை வேரோடு அறுத்து விட்டவர்களுக்கு பணப் பிரச்சனை தீராத பிரச்சனையாக இருக்கத்தான் செய்யும். சிந்தித்து பாருங்கள்!