பெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும்! உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

lalitha-mantra

தெய்வீக மந்திரங்களுக்கு இருக்கும் சக்தி அளப்பரியது ஆகும். நாம் என்னதான் விழுந்து விழுந்து கடவுளை வணங்கினாலும், ஒரு மந்திரத்தை முறையாக சொல்வதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எல்லோருமே தங்களுடைய குல தெய்வ மந்திரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இஷ்ட தெய்வங்கள் உடைய மந்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பது சுகபோக வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது உடலும், மனமும் இயல்பாகவே தூய்மை அடைந்து விடுகிறது.

Lalithambikai

அதன் பிறகு நாம் செய்யும் எல்லா செயலும் ஜெயமாகும். அத்தகைய மந்திரங்களில் அம்பிகைக்குரிய இந்த மந்திரம் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. அது என்ன மந்திரம்? எப்படி உச்சரிக்க வேண்டும்? அதனை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

அம்பாளுடைய ஆயிரம் நாமாவளிகளை போற்றும் இந்த ஸ்லோகத்திற்கு ‘லலிதா சஹஸ்ரநாமம்’ என்பது பெயராகும். ‘லலிதா’ என்றால் ‘விளையாடுவது’ என்பது பொருளாகும். அம்பிகை உடைய ஆயிரம் பெயர்களை கொண்ட இந்த ஸ்லோகம் பெண்கள் தினமும் உச்சரித்து வந்தால் அவர்களை வெல்வதற்கு எந்த ஒரு சக்தியாலும் முடியாது. ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் இதனை தாராளமாக உச்சரிக்கலாம். ஆனால் பெண்கள் உச்சரிக்கும் பொழுது அதீத பலன்கள் கிடைக்கும்.

oil bath

இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமைகளில் பெண்கள் உச்சரிக்க வேண்டும். பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து கடைபிடிக்கும் பெண்களுக்கு தோஷங்கள் எதுவும் அண்டுவதில்லை. ஆண்கள் என்றால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிப்பது உத்தமம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு குளித்து விட்டு பெண்கள் பூஜை அறையில் அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் உச்சரிக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு புது சக்தி பிறக்கும்.

அந்த சக்தியானது அவர்களை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. ஆயிரம் நாமங்களை உச்சரித்து முடிக்கும் வரை இடையில் எழுந்திரிக்க கூடாது என்பது விதியாகும். இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் தலைதெறிக்க ஓடி விடும். பில்லி, சூனியம், ஏவல் என்று எந்த ஒரு தீய சக்திகளும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. உங்களை நோக்கியிருக்கும் பகைவர்கள், திருஷ்டிகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

lalithambikai

அன்றாட பூஜைகளில் நீங்கள் செய்யும் தவறுகளை கூட மன்னிக்கும் ஆற்றல் இந்த லலிதா ஸகஸ்ர நாமத்திற்கு உண்டு. குலதெய்வ வழிபாடுகளை நிறுத்தினால் உண்டாகும் பாவங்களில் இருந்து விமோசனம் பெறுவதற்கும் உதவும். நவகிரக தோஷங்கள் எதுவும் உங்களை பெரிதாக பாதிக்காது. வீட்டில் லலிதா சஹஸ்ரநாமம் தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது, பொன், பொருள் முதலான அனைத்து செல்வங்களும் மென்மேலும் பெருகும். உங்களால் இவற்றை தொடர்ந்து செய்ய முடியாமல் போகும் பொழுது, ஒலி வடிவமாக தினமும் வீட்டில் ஒலிக்க விடுங்கள், எல்லா நன்மைகளும் உண்டாகும். அதை விட கோவில்களில் அமரும் பொழுது இந்த ஸ்லோகத்தை உச்சரித்து பாருங்கள்! வேண்டிய வேண்டுதல்கள் தடைகள் எதுவும் இல்லாமல் அப்படியே நிறைவேறும்.