இந்த சமையலை பொருத்த வரையில் எல்லா நேரமும் வகை வகையாக நம்மால் சமைத்துக் கொண்டிருக்க முடியாது. ஏதாவது ஒரு நேரத்தில் கொஞ்சம் சலிப்பு தட்டும் என்று ஏதாவது சிம்பிளாக செய்து விடலாம் என்று தோன்றும். அது போன்ற சமயத்தில் கூட நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடலாம் என்றால் அதுக்கு இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் தான் பெஸ்ட். ஒரு முறை இப்படி மட்டும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க இனி எப்ப சிக்கன் எடுத்தாலும் இதை தான் செய்வீங்க. வாங்க இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த சிக்கன் வருவலை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ, பெரிய வெங்காயம் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் -1 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா -1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை கொத்தமல்லி -1 கைப்பிடி.
செய்முறை
இந்த வறுவலை செய்வதற்கு முதலில் அரை கிலோ சிக்கனை சுத்தம் செய்து எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கருவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள், காஷ்மீரின் மிளகாய், மஞ்சள் தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, அனைத்தையும் சேர்த்து இத்துடனே இரண்டு ஸ்பூன் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் ஊற வைத்த சிக்கனை இதில் சேர்த்தப் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து மூடி போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கலந்து மறுபடியும் மூடி விடுங்கள். மேலும் ஒரு ஐந்து நிமிடம் இது அப்படியே வேகட்டும். இந்த நேரத்தில் சிக்கனிலிருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியே வந்து அதிலேயே இந்த மசாலா அனைத்தும் வேக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: பூரி மாவு பிசையும் போது இந்த 1 பொருளை சேர்த்து பிசைந்தால் ஒரு சொட்டு எண்ணெய் கூட குடிக்காது. பூரி சாஃப்டாக, உப்பி, நன்றாக சிவந்து கிடைக்கும்.
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து சிக்கனை ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் கைவிடாமல் கலந்து விடுங்கள். சிக்கன் இந்த மசாலாக்களுடன் நன்றாக வெந்து சிவந்து சூப்பராக தயாராகி விடும். மசாலா முதல் எண்ணெய் வரை அனைத்தும் இதில் சேர்த்து விட்டதால் அடுப்பில் வைத்த பிறகு நாம் எதையுமே சேர்க்க வேண்டாம். இந்த சிக்கன் வறுவல் செய்வது மிகவும் சுலபம். இதை சமைக்கவே தெரியாதவர்கள் கூட சுலபமாக செய்து விடலாம். இந்த முறையில் செய்து பாருங்கள் இனி நேரம் இருந்தால் கூட இதை தான் சமைப்பீர்கள் அந்த அளவிற்கு டேஸ்ட் அட்டகாசம் ஆக இருக்கும்.